Advertisment

சாண்டா வேடத்தில் நண்பர்களுக்கு சர்ப்ரைஸ்.. இவர்களின் உளவாளி யார் தெரியுமா?

Gayathri Yuvaraj Christmas Surprise to Roshini and Jack Viral Video Tamil News அவர்களுடைய வீடு எது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்தனர்.

author-image
WebDesk
New Update
Gayathri Yuvaraj Christmas Surprise to Roshini and Jack Viral Video Tamil News

Gayathri Yuvaraj Christmas Surprise to Roshini and Jack Viral Video Tamil News

Gayathri Yuvaraj Christmas Surprise to Roshini and Jack Viral Video Tamil News : வேளச்சேரியில் உள்ள தன்னுடைய நண்பருடைய ரெஸ்டாரென்ட்டிற்குச் சென்று அங்கு தங்கள் கைகளாலேயே கேக் செய்து, தங்களுடைய நண்பர்களுக்குக் கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தனர் விஜய் டிவி புகழ் காயத்ரி - யுவராஜ் ஜோடி. சாதாரணமாக கேக் செய்து வீடியோ போடலாம் என்று நினைத்தவர்களுக்கு கேக் செய்யத் தெரியாது என்பதால், எக்ஸ்பெர்ட்டை நாடியுள்ளனர். அதுதான் அந்த ரெஸ்ட்டாரென்ட். இனி, அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

கேக் செய்வதற்கு முதல்  படி, கைகளைக் கழுவுவது என்றுகூறி கைகளை நன்கு சுத்தம் செய்த பிறகு, முடி உதிராமல் இருக்க அதற்கான கேப் ஆகியவற்றை அணிந்து களத்தில் இறங்கினார் காயத்ரி. கூடவே அவருக்குத் துணையாகக் கணவரும் இருக்க, கேக் பேக்கருடன் கேக் செய்ய ஆரம்பித்தனர்.

publive-image

ஏற்கெனவே பேக் செய்து வைத்த ப்ளெயின் கேக்கை அலங்கரிக்கத் தயாரானார் காயத்ரி. பேக்கர் சொன்னபடி, முதலில் கேக்கை வடிவமைத்தார். அதுவும் கேக்கிற்கு வலிக்காமல் பிளாக் ஃபாரஸ்ட் கேக் செய்ய ஆரம்பித்தார். மூன்று லேயர்களாக கட் செய்து, அதன்மேல் சர்க்கரை சிரப் தடவி, க்ரீம் அப்ளை செய்து மீண்டும் கட் செய்து வைத்த கேக்கை ஓட்டினார். இப்படி ஒருவழியாக கேக்கை அலங்கரித்து முடித்தார்.

இந்த கேக்கை அலங்கரிப்பதற்குள் பாதி பொருள்களை சாப்பிட்டே முடித்தனர் இந்த ஜோடி. பிறகு சாண்ட்டா வேடமிட்டு, தங்களுடைய நெருங்கிய நண்பர்களான ஜாக் மற்றும் ரோஷினி ஜோடியை சந்திக்க விரைந்தனர். அபார்ட்மெண்டிற்கு சென்றவர்கள், அவர்களுடைய வீடு எது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்தனர். ஒருவழியாக அவர்களின் வீட்டை கண்டுபிடித்து, இருவருக்கும் ஏராளமான ஜாலியான டாஸ்க்குகளை கொடுத்தனர்.

சிறிது நேரம் தாங்கள் யார் என்கிற அடையாளத்தை வெளிப்படுத்தாமல் விளையாடிக்கொண்டிருந்தனர் காயத்ரி யுவராஜ் ஜோடி. ரோஷினி ஜோடியும் அவர்கள் யாராக இருக்கக்கூடும் என்பதைப் பல பெயர்களைக் கூறிக்கொண்டே வந்தனர். ரோஷினி வீட்டில் காயத்ரி ஜோடியின் உளவாளியாக செயல்பட்ட ராஜ்மோகனும் இவர்களுடன் இணைந்தார். இறுதியாக தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தி அனைவரும் இணைந்து சந்தோஷமாக கேக் பரிமாறி கொண்டாடினர். நேற்று அப்லோட் செய்யப்பட்ட இந்த காணொளி, 1 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Youtube Gayathri Yuvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment