Advertisment

இட்லி, தோசைக்கு சூப்பரான சைட் டிஷ்: இஞ்சி சட்னி

புளி, வெல்லம் என அறுசுவையின் கூட்டாக இருக்கும் இந்த சட்னியின் ரெசிபியைப் பார்ப்போமா!

author-image
WebDesk
New Update
andhra style ginger chutney for idly dosa rice tamil

Ginger chutney recipe in Tamil

Ginger Chutney Recipe Tamil: சுவை மட்டுமில்லாமல் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி நிச்சயம் உங்கள் ஃபேவரைட் லிஸ்ட்டில் ஒன்றாக இருக்கும். சுவை குறைந்த உணவையும் இந்த இஞ்சி சட்னி மேம்படுத்தும். பொதுவாக இஞ்சி என்றாலே பலருக்குப் பிடிக்காது. ஆனால், இந்த வித்தியாச சட்னி குழந்தைகள் முதல் முதியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். புளி, வெல்லம் என அறுசுவையின் கூட்டாக இருக்கும் இந்த சட்னியின் ரெசிபியைப் பார்ப்போமா!

Ginger chutney tamil: தேவையான பொருள்கள்

தோல் நீக்கப்பட்டுப் பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/4 கப்

புளி - 1 எலுமிச்சைப் பழ அளவு

தேங்காய் அல்லது வாசமற்ற எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3-4

கறிவேப்பிலை - 1 கொத்து

பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

Spicy Ginger Chutney Andhra style recipe Spicy Ginger Chutney Andhra style recipe

செய்முறை

1/4 கப் சூடான நீரில் புளியை ஊறவைத்துக் குளிர்விக்கவும்.

கனமான பாத்திரத்தில் 1½ டீஸ்பூன் எண்ணெய்யைச் சூடாக்கி, அதில் பருப்பைச் சேர்க்கவும். அவற்றின் நிறம் மாறியபின், வெந்தயம் மற்றும் கடுகு விதைகளைச் சேர்க்கவும். கடுகு வெடிக்கும்போது, ​​நறுக்கிய இஞ்சி, உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவேண்டும். இஞ்சியின் பச்சை வாசனை நீங்கும் வரை குறைந்த தீயில் இவற்றை நன்கு வறுக்கவும். பின்னர் இந்த கலவையைக் குளிர்விக்கவும்.

நன்கு குளிர்ந்த பிறகு அவை அனைத்தையும் சட்னி கிரைண்டரில் சேர்த்து, அவற்றோடு விதைகள் நீக்கிய புளிச் சாறு, உப்பு மற்றும் வெல்லத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். உப்பு மற்றும் வெல்லத்தின் அளவை சரிபார்த்துத் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

சட்னி தயாரானதும், ½ தேக்கரண்டி கடுகு மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை இலைகளை எண்ணெய்யில் வருத்து சட்னியுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். அவ்வளவுதான். சுவையான இஞ்சி சட்னி தயார். இதனை இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment