இஞ்சியை நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துகொள்வோம். இந்நிலையில் இதை நாம் தனியாக இஞ்சி தண்ணீர் செய்து குடிக்கலாம். இஞ்சியில் உள்ள ஜிஞ்ஞரால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். இந்நிலையில் இஞ்சியை நாம் எப்படி எடுத்துகொள்ளலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
இஞ்சி டீ
இஞ்சியை துருவிக்கொள்ள வேண்டும். அதை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து ஆறியதும், தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
ஐஸ் இஞ்சி டீ
இஞ்சி தண்ணீர், கிரீன் டீ, எலுமிச்சை சாறை கலந்து கொதிக்க வைக்கவும் . இந்நிலையில் இது ஆறியதும் ஐஸ், புதினாவை சேர்த்து குடிக்கலம். இந்நிலையில் இப்படி செய்து குடித்தால், வரட்டு இருமல், வரண்ட தொண்டையை குணப்படுத்தும். தொண்டை வலியை குணமாக்கும்.
இந்நிலையில் மலச்சிக்கலால் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலை இது குணமாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலை குணமாக்கும். மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சீராக்கும்.
இஞ்சி தண்ணீர், பெருஞ்சீரகம், ஓமம் ஆகியவற்றை சேர்த்து குடித்தால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதை நாம் உணவுக்கு முன்பு அல்லது உணவுக்கு பின்பு குடித்தால் அஜீரணம் மற்றும் வயிறு உப்புதலை தடுக்கும்.
இந்நிலையில் இது உடலை சுத்திகரிக்க உதவும். இனிப்பு மற்றும் காஃபைன் அதிகம் உள்ள பானங்களை குடிக்கும்போது, உடல் வரட்சி ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
உடல் பயிற்சி செய்த பிறகு நாம் இஞ்சி தண்ணீரை குடித்தால் வீக்கத்தை குறைக்கும். தசைகளில் வலி ஏற்படாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“