2050-ஆம் ஆண்டுக்குள் பார்வையற்றோர் எண்ணிக்கை 115 மில்லியனாக அதிகரிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி

2050-ஆம் ஆண்டில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 115 மில்லியனாக அதிகரிக்கும் எனவும் லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டுக்குள் உலகில் பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுகள் கொண்டோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரிக்கும், அதாவது, 2020-ஆம் ஆண்டில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 36 மில்லியனிலிருந்து 38.5 மில்லியனாக அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2050-ஆம் ஆண்டில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 115 மில்லியனாக அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரம் குறித்த சர்வதேச இதழான லான்செட்டில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வின்படி, 2015-ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 36 மில்லியன் பேர் பார்வையற்றோர் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 217 மில்லியன் பேர் மிதமான அல்லது ஆபத்தான பார்வை குறைபாடுகளுடன் உள்ளனர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 188 மில்லியன் பேர் லேசான கண் சேதத்துடன் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. கண்ணில் உள்ள லென்சின் நீட்சித்தன்மை குறைபாட்டால், பார்வை சேதத்திற்கு, 2015-ஆம் ஆண்டில் 35 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் சுமார் 1.09 பில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அதிகபட்சமாக 80 சதவீதம் பேர் அதாவது 11.7 மில்லியன் பேரும், அதற்கடுத்ததாக கிழக்கு ஆசியாவில் 6.2 மில்லியன் பேரும், தென்கிழக்கு ஆசியாவில் 3.5 மில்லியன் பேரும் பார்வையற்றவர்களாக உள்ளனர்.

“பார்வையற்ற தன்மை மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் முதியோர்கள் பாதிக்கப்படுவது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.”, என வயதானவர்கள் பாதிக்கப்பட்ட மக்களில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்துகின்றனர், ஆய்வை மேற்கொண்டவர்களுள் ஒருவரான ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரூபெட் போர்ன் கூறுகிறார்.

மேலும், 200 மில்லியன் பேர் லேசான பார்வைக் குறைபாட்டிலிருந்து ஆபத்தான பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டிற்குள் 550 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close