சிக்கன், உருளைக் கிழங்கு பயன்படுத்தி நக்கெட்ஸ் ரெசிபி சாப்பிட்டிருப்போம். அதுவும் கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் பாசிப் பருப்பு வைத்து நக்கெட்ஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு- 1/2 கப்
பச்சைபயறு- 1/2 கப்
உப்பு-தேவையான அளவு
வெங்காயம்- 1/2 கப்
பச்சை மிளகாய்- 2
கேரட்- 1/4 கப்
கறிவேப்பிலை- சிறிதளவு
பிரெட் துண்டுகள்- 1 கப்
சிவப்பு மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
கருப்பு மிளகு-1/4 டீஸ்பூன்
சாட் மசாலா-1/2 டீஸ்பூன்
சீரகம்-1/2 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் மாவு-2 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
இரண்டு பருப்புகளையும் ஒன்றாகக் கலந்து கழுவி சுத்தம் செய்து 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பருப்பை வேக வைக்கவும். பாதி வேகும் வரை சமைக்கவும்.
பருப்பை ஆறவைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துவிடவும். மீதமுள்ள பருப்பை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பை எடுத்து, இப்போது அதில் பொடியாக நறுக்கிய காய்கறிகள், மசாலா, பிரட் துண்டுகள் மற்றும் கார்ன்ஃப்ளார் சேர்த்து மாவை தயார் செய்யவும்.
இந்த கலவையில் இருந்து நக்கெட்ஸ் வடிவத்தில் உருட்டவும். அடுத்து கடாயில் எண்ணெண் ஊற்றி சூடானதும்
ஒவ்வொரு நக்கெட்ஸ்களாக எடுத்துப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான். இதில் வேண்டும் என்றால் சீஸ் துருவி கலவையின் உள்ளே ஸ்டப் செய்து பொரித்து எடுக்கவும். இப்போது நாக்கில் எச்சில் ஊறும் சுவையான பாசிப் பருப்பு நக்கெட்ஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“