scorecardresearch

பொடுகு தொல்லைக்கு குட் பை! இந்த ஆனியன் ஹேர் மாஸ்க் டிரை பண்ணுங்க

வெங்காய சாற்றில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மற்றும் கந்தகம் உள்ளது, இவை முடி பிரச்சனைகளை சமாளிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Hair care
Hair care

வானிலை மாற்றம், அதிகரித்த மன அழுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் உங்கள் முடி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவை அசாதாரண முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். எனவே, நீங்கள் தொடர்ந்து முடி உதிர்வதை அனுபவித்துக் கொண்டிருந்தால், வீட்டில் நீங்களே தயார் செய்யக்கூடிய ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்.

முடி உதிர்வுக்கு வெங்காயச் சாறு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்பட்டாலும், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயுடன் இணைந்தால், அது மிகவும் பயனுள்ளதாக மாறும்.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்

வெங்காய சாறு

புதிய கற்றாழை ஜெல்

செய்முறை

*ஒரு கடாயில், தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல்லை நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

*பிறகு 2 ஸ்பூன் கலவையை எடுத்து அதில் நான்கு ஸ்பூன் வெங்காய சாறு சேர்க்கவும்.

*தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன், இதை உச்சந்தலையில் தடவி, உங்கள் விரல் நுனியால் லேசாக மசாஜ் செய்யவும்.

என்ன பயன்கள்?

*தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவுவதாக அறியப்படுகிறது. எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

*கற்றாழை ஜெல்லில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெயுடன், ஜெல்லைச் சூடாக்கும் போது, எண்ணெய்யும் அந்த குணங்களைப் பெறுகிறது.

*வெங்காய சாற்றில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மற்றும் கந்தகம் உள்ளது, இவை முடி பிரச்சனைகளை சமாளிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது.

ஆனியன் ஹேர் மாஸ்க்

மாதத்துக்கு இருமுறை இந்த ஹேர் மாஸ்க் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!

இரண்டு டீஸ்பூன் வெங்காய சாற்றுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலக்கவும். உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் இந்த மாஸ்கை பயன்படுத்தலாம்.

இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி தண்டுகளுக்கு பிரகாசத்தையும் சேர்க்கிறது. பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது, மேலும் உச்சந்தலையில் ஏதேனும் தொற்றுநோய் இருந்தால் அதையும் நீக்குகிறது..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Hair care onion hair mask dandruff home remedy