Advertisment

ஆரோக்கியமான, பளபளப்பான, அடர்த்தியான தலைமுடிக்கு ஆயுர்வேத மூலிகைகள்!

ஆயுர்வேதத்தின்படி உங்கள் வீடுகளில் காணப்படும் எளிய மூலிகைகள்’ உங்கள் தலைமுடி பிரகாசத்தை மேம்படுத்த உதவுகின்றன.

author-image
WebDesk
New Update
Hair care tips

Hair care tips Ayurveda herbs for healthy shiny voluminous hair

முடி பராமரிப்புக்கு நிறைய நேரமும், முயற்சியும் தேவை. உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்ற விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை. உண்மையில், ஆயுர்வேதத்தின்படி, உங்கள் வீடுகளில் காணப்படும் எளிய மூலிகைகள்’ உங்கள் தலைமுடி பிரகாசத்தை மேம்படுத்த உதவுகின்றன, இதனால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

Advertisment

நியாயமான மற்றும் எளிதான முடி பராமரிப்பு ஆலோசனையை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஆயுர்வேத நிபுணர் திக்ஸா பவ்சர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில மூலிகைகளைப் பகிர்ந்துள்ளார்.

நெல்லி

publive-image

நெல்லியில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை நுண்ணறைகளுக்குள் ஊடுருவி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் ஆக்குகிறது. இது அதிக இரும்பு மற்றும் கரோட்டின் உள்ளடக்கம் காரணமாக முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்ற மூலிகைகளுடன் சேர்த்து கூந்தலுக்கு நெல்லிக்காய் பேஸ்ட்டை உருவாக்கலாம் அல்லது அனைத்து வகையான முடி பிரச்சனைகளுக்கும் நெல்லிக்காயை உட்கொள்ளலாம் என்று மருத்துவர் பாவ்சர் கூறினார்.

கரிசலாங்கண்ணி

இந்த மூலிகை கிட்டத்தட்ட அனைத்து ஆயுர்வேத முடி எண்ணெய்களையும் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது தலைமுடிக்கு சிறந்த உணவாகும்.

ஆயுர்வேத மருத்துவத்தில், கரிசலாங்கண்ணி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைகள் முடிக்கு டானிக்காக செயல்படுகிறது. முடி உதிர்தல், பொடுகு, முன்கூட்டிய நரைத்தல் போன்ற முடி பிரச்சனைகளில் இது அற்புதமாக வேலை செய்கிறது, மேலும் முடியை பலப்படுத்துகிறது.

ஆயுர்வேதத்தின்படி, இது ‘முடிக்கான ரசாயனம்’ ஆகும், இது அன்டி- ஏஜிங் பண்புகள் மற்றும் புத்துணர்ச்சியைக் கொண்டுள்ளது. இது ஹேர் ஆயில் அல்லது ஹேர் மாஸ்க் வடிவில் சிறப்பாகப் பயன்படுத்தப்படலாம்.

தேங்காய்

publive-image

உலர்ந்த தேங்காயை சிற்றுண்டியாகவும், தேங்காய் நீரை ஆற்றல் பானமாகவும் அல்லது தேங்காய் எண்ணெய் முடிக்கு ஊட்டமாகவும் எந்த வடிவத்திலும் பயன்படுத்தலாம். "இந்தியாவில் தேங்காய் எண்ணெய் மிகவும் பயன்படுத்தப்படும் முடி எண்ணெய் ஆகும், ஏனெனில் இது சிறந்தது" என்று மருத்துவர் பாவ்சர் கூறினார்.

கற்றாழை

publive-image

இது ஒரு ஹேர் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம் அல்லது உட்கொள்ளலாம். கற்றாழையை உங்கள் உச்சந்தலையிலும் கூந்தலிலும் தேய்த்து, உங்கள் மயிர்க்கால்களில் ஊடுருவ அனுமதித்தால், சேதமடைந்த, உலர்ந்த கூந்தலை மேம்படுத்தலாம். ஒரு மணி நேரம் வைத்த பிறகு, லேசான ஷாம்பூவுடன் ஜெல்லை கழுவவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment