உங்கள் தலைமுடியைப் பராமரிக்க, கண்டிஷனர்கள் சிறந்தவை, ஆனால் நீங்கள் ஹேர் மாஸ்க் மூலம் மட்டுமே ஆழமான சிகிச்சையை அளிக்க முடியும். அவை உங்கள் இழைகளை மென்மையாகவும், நீரேற்றமாகவும் நீண்ட நேரம் வைத்திருக்கும்.
ஹோம்மேட் ஹேர் மாஸ்க்குகள் உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்கின்றன. உங்கள் சமையலறையில் உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தி எளிதாக இந்த ஹேர்மாஸ்க் செய்யுங்கள்
ஆயில் ஹேர்மாஸ்க்
சூடான கருவிகள் முதல் மாசுபாடு வரை உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும் பல விஷயங்கள் உள்ளன. இதற்கு, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் சில வைட்டமின் எண்ணெய்கள் அடங்கிய ஹேர் மாஸ்க்கைத் தயாரிக்க வேண்டும்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்து, அதே கிண்ணத்தில் 3-4 துளிகள் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ எண்ணெய்களைச் சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும். இந்த மாஸ்கை உங்கள் உச்சந்தலையைத் தவிர்த்து, தலைமுடி முழுவதும் தடவவும். 30 நிமிடங்கள் வைத்து, பின்னர் அதை கழுவவும்.
தேன் தயிர் மாஸ்க்
இந்த மாஸ்க் அனைத்து முடி வகைகளுக்கும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு தேவையானது இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி சூடான தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்.
இவை அனைத்தையும் நன்கு கலந்து, உங்கள் தலைமுடியில் இருந்து உச்சந்தலை வரை தடவவும். அதை நன்றாக மசாஜ் செய்து 30-45 நிமிடங்கள் வைத்து பின் கழுவவும்.
தேன் மாஸ்க்
இயற்கையான தேனில், பளபளப்பான நீண்ட கூந்தலைத் தரும் பல்வேறு நன்மைகள் உள்ளன.
இந்த ஹேர் மாஸ்க்கிற்கு, நீங்கள் ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரில் 3 தேக்கரண்டி தேன், அதில் அரைத்த ஒரு வெங்காயத்தை சேர்த்து கலக்கவும். இப்போது, இந்த மாஸ்கை உங்கள் உச்சந்தலையில் தடவி, ஒருமணி நேரம் கழித்து, ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் கழுவவும்.
மாய்ஸ்சரைஸ் மாஸ்க்
தேங்காய் பால் மற்றும் ஆலிவ் எண்ணெய் உங்கள் தலைமுடியை மென்மையாக்கவும், சீரமைக்கவும் சிறப்பாக செயல்படுகின்றன.
1/4 கப் தேங்காய் பாலில் 1/2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலக்கவும். இந்த மாஸ்கை உங்கள் முடிகளில் தடவுங்கள், முனைகளில் கவனம் செலுத்துங்கள். 20 நிமிடங்களுக்கு உங்கள் தலையை ஒரு சூடான துண்டில் போர்த்தி, பின்னர் உங்கள் தலைமுடியை சாதாரணமாக கழுவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.