Advertisment

Hair care tips: டீடாக்ஸ் உங்கள் உடலுக்கு மட்டுமல்ல.. தலைமுடிக்கும் தான்.. எப்படி செய்றதுனு பாருங்க!

உங்கள் தலைமுடிக்கு புதிய வாழ்க்கையை வழங்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களானால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hair growth tips

Homemade honey shampoo for strong hair

உடல் மற்றும் அதன் உள் அமைப்புகளைப் போலவே, முடிக்கும் அவ்வப்போது ஒரு டீடாக்ஸ் தேவைப்படுகிறது. அதிகப்படியான அழுக்கு, மாசு, சூரிய ஒளி மற்றும் தூசி ஆகியவற்றை நாம் வெளிப்படுத்தும்போது, ​​முடி அதன் இயற்கையான பிரகாசத்தை இழக்கத் தொடங்குகிறது.

Advertisment

அழுக்கைப் போக்க நீங்கள் உச்சந்தலையில் சேர்க்கும் அனைத்து இரசாயனப் பொருட்களும் அதன் தரத்தை மோசமாக்கும். இதனால்தான் தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர்.

உங்கள் தலைமுடிக்கு புதிய வாழ்க்கையை வழங்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களானால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன.

தேன் ஷாம்பு

publive-image

ஆம், நீங்கள் படித்தது சரிதான். நீங்கள் வீட்டிலேயே தேன் ஷாம்பூவை உருவாக்கலாம், இது உங்கள் தலைமுடியை நச்சுத்தன்மை நீக்க ஒரு சிறந்த வழியாகும். இதற்கு, உங்களுக்கு ஒரு தேக்கரண்டி தேன், மூன்று தேக்கரண்டி ஃபில்ட்டர் நீர் மற்றும் உங்கள் விருப்பப்படி ஒரு அத்தியாவசிய எண்ணெய் தேவைப்படும்.

தண்ணீரில் தேனைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், உங்கள் ஈரமான முடி மற்றும் உச்சந்தலையில், கலவையை தடவி, அத்தியாவசிய எண்ணெயைச் சேர்க்கவும். நன்றாக மசாஜ் செய்யவும், குறிப்பாக உச்சந்தலையில். முடித்ததும், உங்கள் தலைமுடியை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

முடி, தோல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேன் சிறந்ததாக கருதப்படுகிறது. இது உங்கள் கூந்தலில் ஈரப்பதத்தை பூட்டி வைக்கும்.

உங்கள் வழக்கமான ஷாம்பூவிலிருந்து’ தேன் ஷாம்புக்கு மாறுவது ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், தொடர்ந்து பயன்படுத்தும் போது நல்ல முடிவுகளை நீங்கள் கவனிப்பீர்கள்.

மேலும், உச்சந்தலையில் ரசாயனத்தைத் தவிர்ப்பதன் மூலம்’ உங்கள் தலைமுடிக்கு சிறந்த சேவை செய்வீர்கள். இந்த டிடாக்ஸ் ஷாம்புவின் பெரிய விஷயம் என்னவென்றால், தலைமுடியை நன்றாக கழுவ வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்போதெல்லாம் அதைப் பயன்படுத்தலாம்.

வெள்ளரி மற்றும் எலுமிச்சை

publive-image

ஆம், இவை விரைவாக மற்றும் இயற்கையாக முடியை சுத்தம் செய்யும். கோடையில், ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் வெள்ளரி மற்றும் எலுமிச்சை அவசியம் இருக்கும்.

ஒரு பெரிய எலுமிச்சை மற்றும் நடுத்தர அளவுள்ள வெள்ளரிக்காய் இரண்டையும் தோலுரித்து, சிறிய துண்டுகளாக வெட்டவும். அதில் உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கவும்.

இதனை உச்சந்தலையில் தடவி சில நிமிடங்களுக்குப் பிறகு நன்கு அலசவும். இது உச்சந்தலையில் உள்ள அழுக்கு, ஒட்டும் தன்மை மற்றும் கொழுப்பை போக்க உதவும். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு நீக்கவும் உறுதியளிக்கிறது.

உங்கள் வழக்கமான ஷாம்பூவைப் பயன்படுத்துவதைப் போலவே இதையும் பயன்படுத்தலாம்.

இந்த வெளிப்புற பயன்பாடுகளைத் தவிர, உங்கள் உணவு உங்கள் முடியின் தரத்தையும் பாதிக்கிறது என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் தலைமுடி நச்சுத்தன்மை நீக்க விரும்பினால், நிறைய தண்ணீர் உட்கொண்டு, உங்கள் உணவை முடிந்தவரை சுத்தமாக வைத்திருங்கள். புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment