Advertisment

Republic Day 2022: குடியரசு தின வாழ்த்து... நண்பர்களுக்கு அனுப்ப சூப்பரான போட்டோஸ்!

Republic Day 2022 Wishes Images: இந்திய அரசியல் சாசனம் இயற்றப்பட்டு, 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி அன்று செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நாளை நினைவுகூறும் விதமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் கொண்டாடி வருகின்றோம்.

author-image
WebDesk
New Update
Republic Day 2022 Wishes Images

Happy Republic Day 2022 Wishes Images : இந்நாளை கொண்டாடுவதோடு இந்நாளின் பின்னால் இருக்கும் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்வோம். என்னதான் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறினாலும், இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அதிகார அமைப்பும், நிர்வாக அமைப்பும், சட்ட அமைப்பும் அப்படியே பின் தொடர்ந்தது. இந்தியர்களை இந்தியர்கள் ஆளும் நோக்கில் இந்தியர்களுக்கான அனைத்து உரிமைகளையும் வரையறை செய்யும் அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று 1935ன் ஆண்டே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.என்.ராய் உறுதியாக கூறினார்.

Advertisment

அரசியல் சாசன நிர்ணய சபை (Assembly constituent) 1946ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு கமிட்டிகள் ஒதுக்கப்பட்டு இந்திய அரசியல் சாசனம் உருவாக்கும் பணிகள் துவங்கின. ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி 1947ம் ஆண்டில் வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.

மத்திய அதிகாரம் மற்றும் அரசியல் சாசன கமிட்டியின் உறுப்பினராக அன்றைய பிரதமர் நேரு நியமிக்கப்பட்டார். மாகாணங்களுக்கான அரசியல் சாசன கமிட்டிக்கு சர்தார் வல்லபாய் படேல் நியமிக்கப்பட்டார். வரைவுக்குழு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், பழங்குடிகளுக்கான ஆலோசனை குழு தலைவராக வல்லபாய் படேல் நியமிக்கப்பட்டார்.

இந்த குழுக்களின் பல்வேறு முன்மொழிவுகள் மற்றும் முடிவுகளை ஆய்வு செய்த வரைவுக்குழு முதல் அரசியல் சாசன வரைவை 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இது தொடர்பாக மக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் பெறுவதற்காக 8 மாதங்கள் பொதுவில் வைக்கப்பட்டன. பிறகு இரண்டாவது வரைவு மீண்டும் 1948ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.

இறுதி வரைவை வெறும் ஒரு மாதத்திற்குள், நவம்பர் 9, 1948 அன்று அம்பேத்கரால் வெளியிடப்பட்டது. முதல் வாசிப்பிற்காக வரைவுக்குழு 5 நாட்கள் மட்டுமே செலவிட்டது.

இரண்டாம் வாசிப்பிற்காக நவம்பர் 15, 1948 அன்று ஆலோசனையை துவங்கிய குழு கிட்டத்தட்ட 11 மாதங்கள் 2 நாட்கள் செலவிட்டது. இந்த காலகட்டத்தில் 7653 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அவற்றில் 2473 விவாதிக்கப்பட்டது.

இறுதி வரைவின் மூன்றாவது வாசிப்பிற்காக அரசியல் சாசன நிர்ணயசபை மீண்டும் நவம்பர் மாதம் 14ம் தேதி அன்று கூடியது. அன்று அரசியல் சாசன வரைவை தாக்கல் செய்தார் அம்பேத்கார். 1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மொத்தம் உள்ள 299 உறுப்பினர்களில் 284 உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டனர். இந்த அரசியல் சாசனத்தில் மொத்தம் 395 பிரிவுகள், 8 அட்டவணைகள் மற்றும் முன்னுரை அடங்கி இருந்தது.

publive-image
publive-image
publive-image
publive-image

இந்த அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26, 1950 முதல் இந்தியா ஒரு குடியரசு நாடாக செயல்பட்டு வருகிறது. உரைக்க சொல்லும் உங்களின் நாட்டுப்பற்றை உலகமும் அறிந்து கொள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வாட்ஸாப் இமேஜ்களை நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும் அனுப்பலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment