Advertisment

ஆசிரியர்கள் தினம்: தமிழகத்தையே தலைநிமிர வைத்த ஆசிரியர்களின் ஃப்ளாஷ்பேக்!

ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த சம்பவத்தை  நெகிழ்வுடன் பகிர்ந்துக் கொண்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆசிரியர்கள் தினம்

ஆசிரியர்கள் தினம்

ஆசிரியர்கள் தினம், செப்டம்பர் 5-ல் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. தலைசிறந்த ஆசிரியர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்யும் நாளாக இதை கூறலாம். அந்த வகையில் தமிழகத்தில் மறக்க முடியாத ஆசிரியர்களைப் பற்றிய பதிவு இது!

Advertisment

ஆசிரியர்கள் தினம்

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து,  ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர்  தினமாக’ கொண்டாடுகிறோம்.

மாணவர்களைச் சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானது என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது இந்த ஆசிரியர்களை மாணவர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள்.

அவர்களை எப்போதுமே ஞாபகம் வைத்துக் கொள்ள தனது பிள்ளைகளுக்கு ஆசிரியரின் பெயரை வைத்து மகிழ்ந்த மாணவர்களும் இங்கு உண்டு. அந்த வகையில்  ஒட்டு மொத்த தமிழகத்தேயே திரும்பி பார்க்க வைத்த சில மறக்க  முடியாத ஆசிரியர்களை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்ப்போமா..

பகவான்:

பள்ளி பருவத்தில் வகுப்பு ஆசிரியர் வரவில்லை என்றால் ஆட்டம், பாட்டம், அரட்டை என்று கொண்டாடும் மாணவர்கள் மத்தியில் , ஒரு ஆசிரியர் பணியிடை மாற்றத்தால் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அழத மாணவர்கள் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தனர்.  ஆசியர் பகவானின் பணியிடை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மாணவர்கல் போராடினர், அழுதனர், கதறினர்.

கடைசியில் கண்ணீர் போராட்டம் வெற்றி அடைந்தது.பகவானின்  மாற்றம் தடை செய்யப்பட்டது. மாணவர்கள் கொண்டாட்டத்தை துவக்கினர்.  ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த சம்பவத்தை  நெகிழ்வுடன் பகிர்ந்துக் கொண்டது.

சபரி மாலா:

நீட் தேர்வினால் தனது டாக்டர் கனவு பலியானதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னையே பலியாக்கிக் கொண்டார் மாணவி அனிதா. அனிதாவிற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் அதி தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஆசிரியர்களுக்கும் இப்போராட்டத்தில் பங்கு இருப்பதை உணர்ந்து தனது அரசுப் பள்ளி ஆசிரியர் பணியை துறந்திருக்கிறார் சபரிமாலா. விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலாவிடம் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பலராலும் வியந்து பாராட்டப்பட்டது.

Teachers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment