காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஏற்படும் 4 தீவிரமான பிரச்சனைகள்

காலை உணவை பெரும்பாலானோர் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், இரவு உணவுக்குப் பிறகு சுமார் 10 மணிநேர இடைவெளிக்குப் பின் காலை உணவை உட்கொள்வது மிகவும்...

காலை உணவை தவிர்க்கக்கூடாது என எத்தனையோ முறை பெரியவர்கள் சொன்னாலும், இந்த எந்திர வாழ்க்கையால் வேகமாக ஓட வேண்டிய கட்டாயத்தால் காலை உணவை பெரும்பாலானோர் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், இரவு உணவுக்குப் பிறகு சுமார் 10 மணிநேர இடைவெளிக்குப் பின் காலை உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். பால், நட்ஸ், இட்லி, முட்டை, என புரதம் நிறைந்த உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவை சரியாக உட்கொள்ளவில்லை என்றால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். அவற்றில் சிலவற்றை காண்போம்.

1. நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்:

காலை உணவை மிஸ் செய்தால், டைப் 2 வகை நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

2. உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது:

இரவில் அதிக உணவை எடுத்துக் கொள்பவர்களைவிட, காலையில் அதிக உணவு எடுத்துக்கொள்பவர்களுக்கு எடை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், காலை உணவை மிஸ் செய்தால், மதியம், இரவு உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வீர்கள்.

3. இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு:

காலை உணவை உட்கொள்பவர்கள், அதனை மிஸ் செய்பவர்களைவிட குறைவாகவே இதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், மன அழுத்தம், உடலில் சர்க்கரை அதிகரிப்பு ஆகியவையும், காலை உணவை தவிர்த்தால் ஏற்படும்.

4. மூளை செயல்பாடு குறையும்:

காலை உணவை உட்கொள்பவர்களுக்கு மூளை திறம்பட செயல்படும். நினைவாற்றல், லாஜிக்கல் திறன் அதிகரிக்கும். காலை உணவை தவிர்த்தால் மூளை செயல்பாடு குறையும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close