Advertisment

ஊறுகாய் ஜூஸ்... விளையாட்டு வீரர்கள் முக்கியமா இதை கவனியுங்க!

Health Benefits of Pickle Juice: குடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தவை, ஏனெனில் அவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியா மற்றும் தாவரங்களை மேம்படுத்துகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pickle juice, health benefits, health benefits of pickle juice,ஊறுகாய் ஜூஸ், உறுகாய் ஜூஸ் நன்மைகள், உடல் நலம், ஹெல்த் டிப்ஸ், indianexpress.com, tamil indian express, nmami agarwal,pickle juice benefits

Health Benefits of Pickle Juice

Health News In Tamil: பல பேருக்கு ஏதேனும் ஊறுகாய் இல்லாமல் உணவு சாப்பிடுவது முழுமையடையாது என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால், ஊறுகாய் ஜூஸின் நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நாம் ஊறுகாய் பயன்படுத்துவது போல, வெளி நாடுகளில் கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்களை வினிகர் மற்றும் உப்பு கலந்த நீரில் போட்டு வைப்பார்கள். அது புளித்து ஊறுகாய் போலாகும். இதனை பிக்கில் ஜூஸ் என்று அழைப்பார்கள். உப்பு மற்றும் சில தாதுக்களின் புளித்த கரைசல், மற்றும் ஒரு சீரண திரவம் ஒரு நல்ல ஆக்ஸிஜனேற்றியாகும்.

Advertisment

ஊறுகாய் ஜூஸ் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் கூறுகையில், அதை தவறாமல் வைத்திருக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊறுகாய் ஜூஸ் “எலக்ட்ரோலைட்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துகளின் ஆதாரங்களாக உள்ளன” என்று அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

Health Benefits of Pickle Juice: ஊறுகாய் ஜூஸ் எப்படி நல்லது?

ஊறுகாய் ஜூஸ் தசைப்பிடிப்பைத் தணிக்க உதவுகிறது.

இது உடலின் இழந்த திரவங்களை நிரப்புவதால், இது ஒரு உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும் பருகும் பானமாக விளையாட்டு வீரர்களிடையே பிரபலமாக உள்ளது. ஊறுகாய் ஜூஸில் உள்ள கால்சியம் குளோரைடு மற்றும் வினிகர் உடலை லகுவாக்குவதற்கும் சோடியம் மற்றும் பொட்டாசியத்தை எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலம் உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.

ஊறுகாய் ஜூஸ் உடலில் ஹைட்ரேட் செய்வதால் தசைப்பிடிப்பிலிருந்து விடுபட உதவுகிறது.

இருப்பினும், இது இயல்பாகவே அமிலத் தன்மையுடன் இருப்பதால் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

புளித்த உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தவை, ஏனெனில் அவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியா மற்றும் தாவரங்களை மேம்படுத்துகின்றன.

உறுகாய் ஜூஸ்: வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள்

ஊறுகாய் ஜூஸ் அத்தியாவசிய வைட்டமின்கள் A மற்றும் வைட்டமின் E ஆகியவற்றின் ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது. ஏனெனில் இது ஆக்ஸிஜனேற்றங்களின் அடிப்படை அளவைக் கொண்டுள்ளது, இது உடலையும் அதன் உயிரணுக்களையும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இருப்பினும், எதையும் அதிகமாக உட்கொள்வது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு மோசமானது என்பதை நினைவில் கொள்ள வெண்டும். குறைவான சோடியம் உணவில் இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அது யூரிக் அமிலத்தை உருவாக்கும்.

வீக்கம் மற்றும் நீர் வைத்திருத்தல் ஆகியவை அதிகப்படியான நுகர்வுடன் ஏற்படக்கூடிய பிற பக்க விளைவுகளாகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Healthy Life Food Tips Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment