Advertisment

பழங்கள் சாப்பிட சிறந்த நேரம் எது? நிபுணர் சொல்வது இங்கே!

ஒவ்வொரு உணவையும் ஒரு பழத்துடன் தொடங்குங்கள், ஏனெனில் இது எடை குறைய உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Health tips

Expert shares best time to consume fruits

பழங்கள் என்று வரும்போது, ​​​​அவற்றை உண்பதற்கு ஒரு சிறந்த மற்றும் மோசமான நேரம் இருப்பதாக பலர் நம்புகிறார்கள். உதாரணமாக, காலையில் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நல்லது என்று மக்கள் கூறுகிறார்கள்; அதேநேரம் சிலர், ஒவ்வொரு உணவிற்கும் முன்னும், பின்னும் பழங்களை உண்ண வேண்டும் என்று நம்புகிறார்கள்.

Advertisment

ஆனால் உண்மையான கேள்வி என்னவென்றால்: உண்மையில் பழங்களை சாப்பிட சிறந்த நேரம் இருக்கிறதா? அவற்றைத் தவிர்க்க வேண்டிய நேரம் ஏதேனும் உண்டா?

இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, மருத்துவர் அச்யுதன் ஈஸ்வர், இன்ஸ்டாகிராமில் பழங்களை’ நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடலாம் என்று விளக்கினார்.

publive-image

"இரண்டு விஷயங்கள் மட்டுமே முக்கியம்" என்று மருத்துவர் ஈஸ்வர் விளக்கினார்:

1. தினமும் குறைந்தது மூன்று பழங்களாவது சாப்பிடுகிறீர்களா?

"இதை விட குறைவாக சாப்பிட்டால், பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். நீங்கள் இதை விட அதிகமாக சாப்பிட்டால், கூடுதல் பலன் இல்லை’’

2. நீங்கள் நாள் முழுவதும் பழங்கள் சாப்பிடுகிறீர்களா?

“காலையில் பழங்கள் சாப்பிட்டால், காலையில்தான் அவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மாலைக்குள், உங்கள் ஆக்ஸிஜனேற்ற நிலை குறையலாம்.

"நீங்கள் தாவர அடிப்படையிலான உணவில் (plant-based diet) புதியவராக இருந்தால், இதோ ஒரு சூப்பர் சிம்பிள் டிப்ஸ்: ஒவ்வொரு உணவையும் ஒன்று அல்லது இரண்டு பழங்களுடன் தொடங்குங்கள். இது ஒவ்வொரு உணவையும் உடனடியாக ஆரோக்கியமாக்குகிறது.

"பழங்கள்’ உங்களுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்," என்று மருத்துவர் முடித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment