எடை குறைப்பு, இதய பராமரிப்பு… உலர்ந்த அத்திப் பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுங்க!

athipalam benefits in tamil: ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும் இந்த அத்திப் பழத்தை முந்திரியுடன் சேர்த்து ஒரு மில்க் ஷேக்காக பருகலாம்.

Health tips in tamil: many benefits of Anjeer (fig)

Health tips in tamil: நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித் தருபவைகளாக பழங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாக உலர் பழங்கள் உள்ளன. ஏனென்றால் உலர் பழங்களில் வைட்டமின்களும் தாதுக்களும் அளவுக்கதிகமாக உள்ளன. மேலும் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் இது போன்ற பழங்களை தான் தற்போது அதிகம் பரிந்துரை செய்கின்றனர்.

அந்த வகையில், நமக்கு மிகவும் பிடித்த ஒரு பழமாகவும் ஏராளமான பயன்கள் நிரம்பிய ஒன்றாகவும் அத்தி பழம் உள்ளது. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி போன்ற வைட்டமின்கள் உள்ளன.

அத்திப் பழ நன்மைகள்:-

இந்த அற்புதமான அத்தி பழத்தை பல வகையாக நம் உணவில் நாம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை வெயிலில் உலர வைத்தோ அல்லது அப்படிவோ உண்ணலாம்.

ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும் இந்த பழத்தை முந்திரியுடன் சேர்த்து ஒரு மில்க் ஷேக்காக பருகலாம்.

இதனை செய்வதற்கு அத்தி பழத்தை நன்றாக ஊறவைத்து பின் அதனுடன் முந்திரி மற்றும் பால் சேர்க்க வேண்டும் .

பொட்டாசியம் நிறைந்த, அத்திப்பழம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. அது மட்டுமல்ல, செரிமான அமைப்பு அதன் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. இதன் உணவு நார்ச்சத்துகள் உங்கள் வயிற்றை எளிதில் நிரப்பவும், நீண்ட நேரம் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், குடல் இயக்கத்தை தூண்டுவும் உதவுகின்றனது.

அத்திப்பழத்தில் உள்ள பினோல், ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் ட்ரைகிளிசரைடுகளில் ஒரு தடுப்பு விளைவைக் கொண்டிருக்கிறது, இதனால் அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் குறைகிறது.

எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அத்திபழம், பொதுவாக உடல் பருமனான நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், பாலுடன் எடுத்துக் கொள்ளும்போது அது பாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் எடை அதிகரிப்பையும் ஏற்படுத்தும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Health tips in tamil many benefits of anjeer fig

Next Story
சப்பாத்தி – பச்சைப் பயறு காம்பினேஷன்: ஒரு முறை இதை டேஸ்ட் பாருங்க!green gram recipes in tamil: pachai payaru gravy.
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express