ஆரோக்கியமான உணவு என்பது காலத்தின் தேவையாகிவிட்டது, உலகெங்கிலும் உள்ள மக்கள் முன்பை விட அதிக ஆர்வத்துடன் தாவர அடிப்படையிலான உணவுகளைத் தேர்வு செய்கிறார்கள்.
பச்சை பட்டாணி- சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் பிற வகையான பீன்ஸ் ஆகியவற்றுடன் பருப்பு வகை குடும்பத்தைச் சேர்ந்தது. அதில், குறைவான கலோரிகள் உள்ளன. அதே நேரம், வைட்டமின்கள் ஏ, கே, தாதுக்கள், பைட்டோநியூட்ரியன்கள், ஆக்ஸிஜனேற்றிகள், புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
சைவ உணவு மற்றும் குளூட்டன் – ஃப்ரீ என உங்கள் உணவுத் தேவைகள் என்னவாக இருந்தாலும், நீங்கள் உட்கொள்ளும் புரத உள்ளடக்கத்தை அதிகரிக்க இது உதவுகிறது.
கண்பார்வை
பச்சைப் பட்டாணியில் உள்ள கரோட்டினாய்டு லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் (carotenoids lutein and zeaxanthin) நல்ல கண்பார்வைக்கு உதவுவதோடு, கண்புரை போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. கணினி, டிவி மற்றும் மொபைல் திரைகளில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் நீல ஒளியில் இருந்து அவை கண்களைப் பாதுகாக்கின்றன.
இதய ஆரோக்கியம்
பட்டாணியில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஆக்சிஜனேற்றம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதோடு, இரத்த நாளச் சுவர்களில் பிளேக்குகள் உருவாவதைத் தடுக்கவும் உதவுகின்றன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் வீக்கம் மற்றும் அழுத்தத்தின் விளைவாகும். பட்டாணியில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். அடிப்படை இதய நிலைகள் உள்ளவர்களுக்கு இது சிறந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி
பச்சைப் பட்டாணியில் உள்ள வைட்டமின் சி, ஈ, துத்தநாகம், கேடசின் மற்றும் எபிகாடெசின் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் அவற்றில் நிரம்பியிருக்கும் கூமெஸ்ட்ரோல் வயிற்று புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
அழற்சி எதிர்ப்பு
பச்சைப் பட்டாணியில் வைட்டமின் ஏ, பி, கொலஸ்ட்ரால், ஃபெருலிக் மற்றும் கூமெஸ்ட்ரோல் ஆகியவை இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் மூட்டுவலி போன்ற அழற்சி நிலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
தசையை கட்டியெழுப்ப
பட்டாணியில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன, அவை கடுமையான உடற்பயிற்சிகளுக்குப் பிறகு தசை திசுக்களை சரிசெய்யவும், மீண்டும் கட்டமைக்கவும் ஏற்றது.
உடற்பயிற்சியின் பின்னர் உங்கள் தசை திசுக்கள் கிழிந்தால், பட்டாணி புரதம் சரியான அமினோ அமிலங்களின் உடனடி விநியோகத்தை வழங்குகிறது. இது இரும்பு மற்றும் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாகும்.
உடலுக்கு ஏராளமான நொதிகளை வழங்குகிறது
உங்கள் உடல்’ ஆற்றலை உற்பத்தி செய்வதற்கும், ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வதற்கும் மற்றும் பலவற்றிற்கும் பயன்படுத்தும் நொதிகளின் வலுவான மற்றும் நிலையான விநியோகத்தை உங்களுக்கு வழங்குவதில் பட்டாணி புரதம் சிறந்தது. பட்டாணி புரதத்தில் ஒவ்வாமையை உண்டாக்கும் பொருட்கள் எதுவும் இல்லை.
எடையைக் கட்டுப்படுத்த
பட்டாணியில் உள்ள புரதம் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது பசியை சீராக்குகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இது தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இல்லாத குறைந்த கலோரி பொருளாகும். இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.