Advertisment

கடுகுக் கீரை வீட்டில் வளர்க்கலாம் தெரியுமா? அவ்ளோ பயன்கள் இருக்கு!

Benefits of mustard seeds and how to grow it at home: கடுகு என்பது இந்திய சமையலில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இவை பருப்போடும், காய்கறிகளோடும் சேர்க்கபடுகின்றன. கடுகு, சார்சன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy Food News in tamil Benefits of mustard seeds and how to grow it at home

Healthy Food News in tamil Benefits of mustard seeds and how to grow it at home

Healthy Food News in tamil:   மைக்ரோகிரீன்கள் என்பவை அடிப்படையில் காய்கறிகள் மற்றும் மூலிகைகள் விதைகளிலிருந்து வளர்க்கப்படும் முளைகள் ஆகும். இந்திய சமையலறைகளில் சில பொதுவான மூலிகைகள் உள்ளன. அவை எளிதில் வளர்க்கக் கூடியவையவையாகவும் மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்களைக் கொண்டவையாகவும் உள்ளன. சமீபத்தில் தான், இந்த மைக்ரோகிரீன்களின் நன்மைகள் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளன. மேலும் உடலில் சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சமையல் வல்லுநர்கள் இந்த முளைகளை பல்வேறு உணவுகளில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இவை உணவில் நல்ல அமைப்பை தருவதோடு, உணவின் சுவையையும் கூட்டுகிறது. அப்படிப்பட்ட மைக்ரோகிரீன்களில் ஒன்று தான் கடுகு முளைகள்.

Advertisment

கடுகு என்பது இந்திய சமையலில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இவை பருப்போடும், காய்கறிகளோடும் சேர்க்கபடுகின்றன. கடுகு, சார்சன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளை காய்கறியாக சமைக்கப்படுகிறது. அதோடு இவை பிரபலமான பஞ்சாபி டிஷ் சர்சன் கா சாகை ஆகும். மற்றும் மக்கி கி ரோட்டியுடன் சேர்த்தும் இவை ருசிக்கப்படுகிறது. கடுகு விதைகளிலிருந்து வெளியேறும் முளைகள் நிறைய நன்மைகளை பயக்க வல்லதாகவும் உள்ளன. 

 

View this post on Instagram

 

A post shared by Lovneet Batra (@lovneetb)

 

கடுகு விதையின் நன்மைகள்:

 *கடுகு விதையில் ஏ, சி, கே மற்றும் ஈ போன்ற பல வைட்டமின்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

*இதில் மைக்ரோகிரீன்ஸ் புரதம், ஃபைபர், ஃபோலேட், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அடர்த்தியாக காணப்படுகிறது. 

* இந்த மைக்ரோகிரீன்கள் நீரிழிவு மற்றும் பிற வாழ்க்கை முறை நிலைமைகளுடன் போராட வல்லவையாக உள்ளன. 

* கடுகு விதை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.

* இது  நெரிசலைக் குறைக்கவும், சைனஸை அழிக்கவும் உதவுகிறது.

* கடுகு விதையில் வைட்டமின் சி இருப்பதால் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகிறது.

* கடுகு கீரைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் காலேவுக்கு அடுத்தபடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

* சர்சன் கா சாகில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் பினோல்கள் போன்ற பைட்டோநியூட்ரியண்டுகள் ஏராளமாக இருப்பது உடல் நோய்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும்  பலப்படுத்துகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Ishita chandra (@ishita.ck_green)

 கடுகு விதையை எவ்வாறு வளர்க்கலாம்:

* ஒரு செவ்வக பானை, பிளாஸ்டிக், மண் அல்லது பீங்கான் அல்லது எளிதில் கிடைக்கக்கூடியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.  அல்லது உணவங்களில் உணவு எடுத்து வரப்படும் உணவு டப்பாக்களை கூட எடுத்துக்கொள்ளலாம். அவற்றின் கீழே சிறிய துளைகளை உருவாக்கி தோட்டக்கலை பானையாகப் பயன்படுத்தலாம்.

 

 

View this post on Instagram

 

A post shared by Micro Munchies PH (@micromunchies.ph)

* சிறிது மண்ணைச் சேர்த்து, கடுகு விதைகளைத் தோராயமாகத் தூவி, மண்ணால் மூடிய பின் சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். 

* பின்னர் அவற்றை வீட்டிற்குள் மறைமுக சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் ஏழு நாட்களுக்கு வைக்க வேண்டும். இப்போது அவை முளைக்க ஆரம்பித்து இருக்கும் 

* அவை விரல் அளவு இருக்கும்போது அவற்றை வெட்டி உங்கள் சாலடுகள் அல்லது சாண்ட்விச்களில் சேர்த்து உண்ணலாம்.  இது காரமான சுவை மற்றும் நிறைய சுவைகளை சேர்த்து தருகிறது. 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment