Advertisment

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் 5 உணவுகள் இவை தான்…!

5 Foods that Increases your Blood Flow Naturally Tamil News: உங்கள் இரத்த இரத்த ஓட்டத்தை இயற்கையாகவே அதிகரிக்கும் 5 உணவுகளை பற்றி இங்கு காண்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy food Tamil News: 5 Foods that Increases your Blood Flow Naturally

Healthy food Tamil News: நம்முடைய உடல் இரத்தம், நீர், ஒரு டஜன் அணுக்கள் மற்றும் உயிர் அணுக்களால் ஆனது என்று நமக்கு சிறு வயதில் கற்பிக்கப்பட்டு இருக்கும். இரத்தம், உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன்களை எடுத்துச் சென்று வளர்சிதை மாற்றக் கழிவுகளை உயிரணுக்களிலிருந்து கொண்டு செல்லும் ஒரு அத்தியாவசிய உடல் திரவமாக இதில் பயன்படுகிறது.

Advertisment

இதில் என்ன ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்றால், நம்முடைய இரத்தம் திரவம் மற்றும் திடப்பொருட்களால் ஆனது. இரத்தத்தின் திரவக் கூறு பிளாஸ்மா என்று அழைக்கப்படுகிறது. இது நம்முடைய இரத்தத்தில் பாதிக்கும் மேலாக உள்ளதாகும். இரத்தத்தின் திடமான பகுதி சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை உள்ளடக்கியது.ஒரு சராசரி வயதுவந்தவருக்கு 5 லிட்டர் இரத்தம் உள்ளது, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் குறைந்த இரத்த அளவைக் கொண்டிருக்கிறார்கள்.

​​நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவு அல்லது இரத்த எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்யும் உணவுகளை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? பல நபர்கள் போதுமான இரத்தத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் மோசமான இரத்த ஓட்டத்தால் சிலர் அவதிப்படுகிறார்கள். இது பெரும்பாலும் பலவீனம், உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு ஆகியவற்றால் வெளிப்படுகிறது. தேவையான நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்படாவிட்டால் நீண்ட காலத்திற்கு இது நரம்பு பாதிப்பு, திசு சேதம் அல்லது பக்கவாதம் போன்றவற்றுக்கும் வழிவகுக்கும்.

இது போன்ற பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்க இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சில உணவுகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். அப்படி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சில உணவுகள் குறித்தது இங்கு காண்போம்.

  1. பீட்ரூட்

பீட்ரூட் எனப்படும் இந்த சிவப்பு காய்கறி ஆக்ஸிஜனேற்றிகளின் புதையலாக உள்ளது. அதன் அழகான நிறத்திற்கு காரணமான நிறமிகள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். இவற்றை பச்சையாக சாப்பிடும்போது, ​​சுழற்சியை மேம்படுத்துவதற்கும், இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், கல்லீரலை வலுப்படுத்துவதற்கும் அறியப்படுகிறது.

publive-image

பீட்ரூட்

"இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் கலவையானது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகரிப்பதை மேம்படுத்துவதற்கும் சுத்திகரிப்பதற்கும் உதவுகிறது", என 'ஹீலிங் ஃபுட்ஸ்' என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.

  1. பெர்ரி

அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி, மல்பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற சீசனில் கிடைக்கும் இனிப்பு மற்றும் புளிப்பு பெர்ரிகளில் இயர்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் நிரம்பியுள்ளது. மேலும் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு அதிசயங்களை செய்பவையாகவும் திகழ்கின்றன.

publive-image

பெர்ரி
  1. மாதுளை

இந்த ஜூசியான, இனிப்பு மாதுளை பழம் பாலிபீனால் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நைட்ரேட்டுகளின் மிகவும் சக்திவாய்ந்த ஆதாரமாகும். அவை நம்பமுடியாத வாசோடைலேட்டர்களாக கருதப்படுகின்றன (மென்மையான இரத்த ஓட்டத்திற்கு இரத்த நாளங்களை நீர்த்துப்போக உதவும் பொருட்கள்). நீங்கள் மாதுளை விதைகளை சாலட்களில் சேர்த்துக் செய்யலாம் அல்லது அவற்றின் சாறு செய்து பருகி வரலாம்.

publive-image

மாதுளை
  1. பூண்டு

இந்த குணப்படுத்தும் மசாலா இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் அதிசயங்களைச் செய்கிறது. பூண்டு அதன் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகளுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுற்றோட்ட மற்றும் செரிமான அமைப்புகளுக்கு உதவுதல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடுவது என முக்கிய மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.

publive-image

பூண்டு
  1. இலவங்கப்பட்டை
publive-image

இலவங்கப்பட்டை

பல கட்ட ஆய்வுகளில் இலவங்கப்பட்டை அதன் செயல்திறனை வெப்பமயமாக்கும் மசாலாவாகக் காட்டியுள்ளது. இது இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்திற்கு உதவும். இரத்த நாளங்கள் போதுமான அளவு நீட்டிக்கப்பட்டால், அது இரத்த ஓட்டத்தைத் தடுக்காது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Lifestyle Healthy Life Healthy Food Tips Tamil Lifestyle Update Healthy Food Tamil News 2 Health Tips Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment