Healthy food Tamil News: கோடைகாலம் நெருங்க கூட இல்லாத நிலையில், வெளியில் வெளுத்து வாங்குகிறது. எனவே இந்த நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்று ஆகும். அப்படி குளிர்ச்சி தரும் உணவுகள் இயற்கை உணவுகளாவும், ஊட்டச்சத்து நிறைந்தவைகளாவும் இருக்க வேண்டும். மேலும் இந்த வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் இளநீர், மோர் அல்லது தயிரில் செய்யப்பட்ட உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தயிர் மற்றும் தயிரில் செய்யப்பட உணவுகளை கடைகளில் வாங்க சிலர் ஐயம் கொள்ளலாம். எனவே வீட்டிலேயே தயிர் தாயார் செய்து, அதில் உணவுகளை தயார் செய்யலாம் என முயலுவார்கள். அப்படி நீங்கள் வீட்டிலேயே சுவையான கெட்டித் தயிர் தாயார் செய்ய நினைப்பவர்களாக இருந்தால் இது உங்களுக்கான செய்முறைதான்.
சுவையான கெட்டித் தயிர் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
1 லிட்டர் பால்
சிறிதளவு தயிர்
நீங்கள் செய்ய வேண்டியது
பால் காய்ச்ச தேவையான ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் சேர்க்காமல் 1 லிட்டர் பாலையும் ஊற்றி நன்றாக சுண்ட காய்ச்சவும். பால் சுண்டிய பின்னர் நன்கு ஆறவிடவும்.
பாலில் உள்ள சூடு முழுவதும் குறைந்த பின்னர், அதை 4 முதல் 5 முறை நன்றாக ஆற்றுங்கள். இப்போது அந்த பாலில் ஒரு ஸ்பூன் தயிரைக் கலக்கவும். பின்னர் அந்த பாத்திரத்தை நன்கு மூடி வைத்து விடவும். 7 முதல் 8 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், நீங்ககள் ஆவலோடு எதிர்பார்த்த சுவையான கெட்டியான தயிர் தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )