what to eat before and after workout tamil: பலர் தங்கள் உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் பழங்கள் அல்லது பருப்பு வகைகளை தேர்ந்தெடுக்கும் போது, நீங்கள் ஒரு சிறந்த சிற்றுண்டியான அரைத்த தேங்காய் மற்றும் வெல்லம் பொடியை எடுத்துக்கொள்ளலாம்.
workout foods tamil: உடற்பயிற்சிக்குப் (வொர்க்அவுட்) பிறகு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றாலும், ஒரு வொர்க்அவுட்டுக்கு முன் நீங்கள் எதை உட்கொள்கிறீர்கள் என்பதற்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஒரு நல்ல பயிற்சிக்கு முந்தைய சிற்றுண்டி உங்கள் வொர்க்அவுட்டை வழக்கமாக்குவதற்கு உற்சாகம் தருவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் மற்றும் ஒரு நல்ல பயிற்சிக்குப் பிறகு மீட்கவும் உதவும்.
Advertisment
பலர் தங்கள் உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் பழங்கள் அல்லது பருப்பு வகைகளை தேர்ந்தெடுக்கும் போது, நீங்கள் ஒரு சிறந்த வொர்க்அவுட்டிற்கு உங்களைத் தூண்டுவதற்கு அரைத்த தேங்காய் மற்றும் வெல்லம் பொடி சுலபமாக தயாரிக்கலாம்.
வாழ்க்கை முறை பயிற்சியாளர் லூக் குடின்ஹோ ஒரு பயிற்சிக்கு முன் ஆற்றலை அதிகரிக்க எளிய, செலவு குறைந்த வழியை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "ஒரு மிக சக்திவாய்ந்த சத்தான சிற்றுண்டி அல்லது பயிற்சிக்கு முந்தைய சிற்றுண்டி," பச்சையாக அரைத்த தேங்காய் மற்றும் ஆர்கானிக் வெல்லம் தூள் எப்படி வெப்பம், ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்புக்கான வெப்பமண்டல மருந்தாக கருதப்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
அரைத்த தேங்காய் மற்றும் வெல்லம் பொடி தயார் செய்யத் தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் வெல்லம் பொடி வேர்க்கடலை (விரும்பினால்)
செய்முறை
ஒரு கிண்ணத்தில், அரைத்த தேங்காய் மற்றும் வெல்லம் பொடி சேர்க்கவும். பிறகு அவற்றை நன்கு கலக்கவும். இவற்றுடன் நீங்கள் விரும்பினால் வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
ஆற்றலை அதிகரிக்கும் தேங்காய் மற்றும் வெல்லம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
தேங்காய்
உலர்ந்த அல்லது அரைத்த தேங்காய் மாங்கனீசு மற்றும் தாமிரத்தின் வளமான ஆதாரமாகும். இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் தினசரி பரிந்துரைக்கப்பட்ட உட்கொள்ளலை நீங்கள் அடையலாம். டயட்டரி ஃபைபர் உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருப்பதை உறுதிசெய்கிறது மற்றும் ஒரு நல்ல பயிற்சிக்கு உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.
வெல்லம்
இயற்கையான சர்க்கரையின் வடிவமாக உள்ள வெல்லம் இரத்தம் நச்சுத்தன்மை ஆகுவதை தடுத்து நச்சுகளை வெளியேற்றும். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்கள் ஆற்றல் அளவை உயர்த்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வேர்க்கடலை
தசைகள் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பை கார்டியோ பயிற்சிகளுக்கு முக்கிய ஆதாரங்களாக பயன்படுத்துவதால், வேர்க்கடலை (அல்லது வேர்க்கடலை வெண்ணெய்) கொழுப்பை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil