Advertisment

சிம்பிளான ரசம் இது: ஆனா அவ்ளோ பயன்கள் இருக்கு!

Kollu Rasam Simple Recipe இந்த கொள்ளு ரசம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vatha kulambu recipe vatha kulambu in tamil

vatha kulambu recipe vatha kulambu in tamil

Kollu Rasam Easy Recipe Tamil News: பீட்ஸா, பர்கர் எனக் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு உடலில் அதிகப்படியான கொழுப்புகளைச் சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் கொள்ளு பருப்பு கைகொடுக்கும். அதிலும் இந்த கொள்ளு ரசம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குளிர் காலத்தில் சூடான சூப்பாகவும் செய்து பருகும் அதன் செய்முறையை இனி பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருள்கள்:

கொள்ளு பருப்பு - 1/4 கப்

புளி - நெல்லியளவு

தக்காளி - 2

மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

பூண்டு - 6

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

நெய் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள், கடுகு - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கல் எதுவும் இல்லாமல் கொள்ளு பருப்பைச் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை குக்கரில் நன்கு வேக வைத்து எடுத்து, ஆறியதும் அதனை மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

அடுத்து தக்காளி, கொத்தமல்லியைக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து தனியே வைத்துக்கொள்ளவும்.

மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து ஒன்றாக அரைத்தெடுக்கவும்.

வாணலியில் நெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளியை சேர்த்துக் கொதிக்க விடவும். அதனோடு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இதனை சூப்பாகவும் குடிக்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment