உடல்வலியைப் போக்கும் எளிமையான எலுமிச்சை இஞ்சி ரசம்

Rasam Recipe Tamil உடல்வலி, தொண்டை வலி உள்ளிட்டவற்றுக்குச் சிறந்த மருந்தாகவும் இந்த ரசம் செயல்படுகிறது.

milagu rasam recipe milagu rasam
milagu rasam recipe milagu rasam

Quick Lemon Ginger Rasam recipe Tamil : காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா பரவுதல் என எளிதாக நோய் தொற்றிக்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். அந்த வரிசையில் நிச்சயம் இந்த எலுமிச்சை இஞ்சி ரசம் கைகொடுக்கும். உடல்வலி, தொண்டை வலி உள்ளிட்டவற்றுக்குச் சிறந்த மருந்தாகவும் இந்த ரசம் செயல்படுகிறது.

தேவையான பொருட்கள்

பிஞ்சு இஞ்சி – 25 கிராம்
பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 டம்ளர்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
சர்க்கரை – 1 சிட்டிகை
எலுமிச்சைச் சாறு – அரைப் பழச் சாறு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நெய் – 2 டீஸ்பூன்
கடுகு, சீரகம் – தலா 1/4 டீஸ்பூன்
பொடித்த மிளகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
தக்காளி – 1

செய்முறை

இஞ்சியைத் தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு, அதுச் சூடானதும் அதில் கடுகு, சீரகம், பொடித்த மிளகு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். அதனோடு தக்காளி, இஞ்சித் துருவல், உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு இந்தக் கலவையோடு பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவேண்டும்.

நுரைகட்டி வரும்போது கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிப்பதற்கு முன் ரசத்தை இறக்கிவிடவும். அவ்வளவுதான்.. சத்தான எலுமிச்சை இஞ்சி ரசம் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy lemon ginger rasam recipe tamil

Next Story
ஹோட்டல் சாம்பார் ரகசியம்.. தெரிஞ்சிக்காம போயிடாதீங்க!hotel sambar recipe hotel samber making video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com