Advertisment

சீட் மிக்ஸ்: பிஸியான வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு உதவும் எளிதான ஆரோக்கிய குறிப்பு!

விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் இருப்பதால், மாதவிடாய், பிசிஓஎஸ் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு நல்லது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy Recipe

சீட் மிக்ஸ்: பிஸியான வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு உதவும் எளிதான ஆரோக்கிய குறிப்பு!

குளிர்காலத்தில், ​​தாராளமாக வெல்லம் மற்றும் சூடான மசாலாப் பொருட்களுடன் விதைகளை அதிகளவில் உட்கொள்ளுமாறு நம் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது பருவகால ஆரோக்கியத்திற்கான பழமையான ஆயுர்வேத செய்முறையாக இருப்பதால், இதைப் பின்பற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும்.

Advertisment

இன்றைய பிஸியாக வாழ்க்கையில், விதைகள் உங்கள் ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும். ஊட்டச்சத்து நிபுணர், ஜூஹி கபூர் இந்த சிக்கலற்ற சீட் மிக்ஸ் ரெசிபியை (seed mix recipe) நம்மிடம் கொண்டு வருகிறார்,

விதைகளை உட்கொள்வதற்கான சிறந்த விகிதம்’ ஆளி விதைகள் 3 பங்கு, எள், சூரியகாந்தி மற்றும் பூசணி விதைகள் தலா 1 பங்கு ஆகும்.

தேவையான பொருட்கள்:

100 கிராம் - பூசணி விதைகள்

100 கிராம் - சூரியகாந்தி விதைகள்

100 கிராம் - எள்

300 கிராம் - ஆளிவிதைகள்

1 தேக்கரண்டி - உப்பு

2-3 தேக்கரண்டி – மிஸ்ரி பவுடர் (misery powder (rock sugar))

1/4 தேக்கரண்டி - கருப்பு மிளகு

செய்முறை

பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகளை எடுத்து தனித்தனியாக அவை வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். எள் மற்றும் ஆளி விதைகளை தனித்தனியாக குறைந்த தீயில் வறுக்கவும்.

ஆளி விதைகளை சுமார் 2-3 நிமிடங்கள் நன்கு வறுக்கவும். அனைத்து விதைகளையும் ஒன்றாக கலக்கவும்.

மிஷ்ரி தூள் (கல் சர்க்கரை), கருப்பு மிளகு மற்றும் சுவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.

குளிர்ந்த உலர்ந்த இடத்தில், காற்று புகாத டப்பாவில் சேமித்து, ஒரு நாளைக்கு சுமார் 1/2 டீஸ்பூன் விதைகளை உட்கொள்ளவும்.

கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்

ஒவ்வொரு விதையும் வெவ்வேறு வெப்பநிலையில் வறுக்கப்படுவதால், எப்போதும் தனித்தனியாக வறுக்கவும்.

விதைகளின் செரிமானத்தை மேம்படுத்துவதால் வறுப்பது முக்கியமானது.

கலவையை காற்று புகாத டப்பாவில் சேமித்து, சூரிய ஒளியில் இருந்து விலகி, குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் வைக்கவும்.

தினமும் 1/2 டீஸ்பூன் விதைகளை சாப்பிடுங்கள்.

நன்மைகள்

இந்த விதைகள் ஒமேகா 3 இன் நல்ல மூலமாகும் – இது இதயத்தையும் மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்களின் வளமான ஆதாரம் - எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. நார்ச்சத்து நிறைந்தது - நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்க நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலில் இருந்து உங்களை காக்கவும் உதவுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்க நல்லது, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் இருப்பதால், மாதவிடாய், பிசிஓஎஸ் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment