Advertisment

மஞ்சள் உங்கள் அழகை அதிகரிக்குமா? சில சுவாரஸ்யமான பியூட்டி ஹேக்ஸ் இங்கே!

மஞ்சள், உணர்திறன் வாய்ந்த சருமத்தில் மிகவும் திறமையாக செயல்படும் என்று அறியப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
turmeric-powder

here are some interesting hacks using turmeric

மஞ்சள் மிகவும் பயனுள்ள வீட்டுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும், இது பல உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்கிறது. நீங்கள் சமைக்கும் உணவில் சுவை சேர்ப்பது மட்டுமின்றி, உங்கள் அழகு பிரச்சனைகளையும் இது போக்குகிறது.

Advertisment

உதாரணமாக, உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தாலும், அதை வெண்மையாக்க மஞ்சளை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும், மஞ்சளை முதன்மைப் பொருளாகக் கொண்ட பல ஸ்க்ரப்கள் மற்றும் பேஸ்ட்களை நீங்களே வீட்டில் செய்யலாம்.

இது கிட்டத்தட்ட அனைத்து தோல் வகைகளுக்கும் பொருந்தும் என்றாலும், மஞ்சள்’ சென்சிட்டிவான சருமத்தில், மிகவும் திறமையாக செயல்படும் என்று அறியப்படுகிறது.

மஞ்சளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு சில சுவாரஸ்யமான அழகு குறிப்புகள் இங்கே உள்ளன. தொடர்ந்து படியுங்கள்.

* அன்றாடம் மேக்கப் செய்யும் போது ஃபவுண்டேஷனைப் பயன்படுத்துபவர்கள், தங்கள் இயற்கையான தோல் நிறத்திற்கு’ நெருக்கமான ஷேட்-ஐ காணவில்லை என்று எப்போதும் புகார் கூறுகின்றனர். மஞ்சளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனையை எளிதாகச் சரி செய்யலாம். சிறிது ஃபவுண்டேஷன் எடுத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். அவற்றை நன்கு கலந்து, ஷேட்-ஐ சரிபார்க்க கையின் பின்புறத்தில் தடவவும். இப்போது அதை முகத்தில் தடவவும்; இது உங்களுக்கு இயற்கையான பிரகாசத்தை தரும்.  உங்கள் பிபி க்ரீமில் கூட,  இந்த ஹேக்கை பயன்படுத்தலாம்.

முன்பு குறிப்பிட்டபடி, மஞ்சள்’ முகப்பரு பாதிப்பு மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் சிறப்பாக செயல்படுகிறது. முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கவும், முகப்பருவை ஆற்றவும் இதைப் பயன்படுத்தலாம். அரை டீஸ்பூன் மஞ்சள் பொடியை எடுத்து, அதனுடன் அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து கொள்ளவும். உடனடி நிவாரணம் பெற இந்த பேஸ்டை, பாதித்த இடத்தில் தடவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் மிருதுவான சருமத்தை பெறலாம்.

* இப்போது, பருவமழை காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கியதால், உதடுகள் வறண்டு போக வாய்ப்புள்ளது. மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உதடு வெடிப்புகளை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம்.

மஞ்சளுடன் ஒரு சிட்டிகை பெட்ரோலியம் ஜெல்லி கலந்து, உங்கள் உதடுகளின் உலர்ந்த சருமத்தை எக்ஃபாலியேட் செய்யவும். ஒரு துணியால் அதை துடைத்து, பின்னர் ஒரு மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யுங்கள்.

இதில் எந்த ஹேக் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment