Advertisment

Hair Care Tips: பளபளப்பான, அடர்த்தியான முடிக்கு செம்பருத்தி, கற்றாழை ஹேர் மாஸ்க்!

இயற்கையான, விரைவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை உறுதிப்படுத்த, வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய சூப்பர் ஹேர் மாஸ்க் ரெசிபி இங்கே உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hair care tips

Hibiscus aloe vera hair mask for shiny thick hair

மன அழுத்தம் மற்றும் மாசுபாடு ஆகியவை கூந்தலுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன, இதனால் நம் தலைமுடி உயிரற்றதாகவும், மெல்லியதாகவும், மந்தமாகவும் இருக்கிறது. சில சிக்கல்களை முழுமையாக தீர்க்க முடியாது என்றாலும், பலவற்றை சில வீட்டு வைத்தியம் மூலம் திறம்பட தீர்க்க முடியும்.

Advertisment

இயற்கையான, விரைவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை உறுதிப்படுத்த, வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய சூப்பர் ஹேர் மாஸ்க் ரெசிபி இங்கே உள்ளது.

இந்த ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இந்த மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்துவது உங்கள் உச்சந்தலையை வலுப்படுத்தி, ஊட்டமளிப்பதோடு, உடையக்கூடிய தன்மை மற்றும் வறண்டு போவதை தடுக்கிறது.

செம்பருத்தி மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க் என்பது இந்தியாவின் தென் பகுதிகளில் அடர்த்தியான மற்றும் கருமையான கூந்தலுக்குப் பயன்படுத்தபடும் பழமையான தீர்வாகும். இந்த ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடிக்கு எவ்வளவு நீரேற்றம் மற்றும் பளபளப்பைக் கொடுக்கும் என்பதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், அதுவும் இரசாயனங்கள் இல்லாமல்!

தேவையான பொருட்கள்

2 டீஸ்பூன் - செம்பருத்தி தூள்

2 டீஸ்பூன் - புதிய கற்றாழை ஜெல்

எப்படி செய்வது?

* செடியிலிருந்து புதிய கற்றாழை எடுத்து, அதன் இலைகளை வெட்டி, உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து தண்ணீரில் 4,5 முறை நன்கு கழுவவும். பிறகு அதை மிக்ஸியில் அரைத்து துணியால் வடிகட்டவும்..

* கற்றாழை ஜெல்லுடன் செம்பருத்திப் பொடியைக் கலக்கவும்.

*இதை உங்கள் உச்சந்தலையிலும், முடியிலும் தடவவும்.

*ஷவர் கேப் மூலம் 30 நிமிடம் மூடி, சாதரண நீரில் கழுவவும்.

பலன்கள்

*செம்பருத்தியில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், ரைபோஃப்ளேவின், கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது, இது முடிக்கு ஊட்டமளிக்கிறது. கூந்தல் உடைவதை தடுக்கிறது, ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கிறது.

* கற்றாழை ஜெல்லில் பல தாதுக்கள் மற்றும் நீர் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையில் ஒரு குளிர்ச்சியான விளைவை வழங்குகிறது. கற்றாழை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது மற்றும் செம்பருத்தியின் ஊட்டச்சத்தை ஆழமாக ஊடுருவ அனுமதிக்கிறது. இது பொடுகைக் குறைத்து முடியை பளபளப்பாக மாற்றும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment