Advertisment

குழந்தைகளுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்.. குறைப்பது எப்படி?

High cholesterol in children | அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மெலிந்த குழந்தைகளுக்கும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும்.

author-image
abhisudha
New Update
lifestyle

High cholesterol in kids

High Cholesterol Symptoms For Children | குழந்தைகளுக்கு அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்| இந்தியாவில் அதிக எடை மற்றும் பருமனான 18 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.

Advertisment

2019-21 ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS-5), சுகாதாரம் மற்றும் சமூகக் குறிகாட்டிகள் பற்றிய அரசின் மிக விரிவான குடும்பக் கணக்கெடுப்பு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 3.4% அதிக எடையுடன் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அப்படியானால் இந்த குழந்தைகளுக்கு அதிக கொழுப்பும் உள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான யுனிசெஃப்பின் உலக உடல் பருமன் வரைபடம் படி, 2030ஆம் ஆண்டில், இந்தியா 27 மில்லியனுக்கும் அதிகமான பருமனான குழந்தைகளைக் கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்னையாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு வயதான குழந்தை 10 கிலோ எடை இருக்கலாம். 13 வயதில் 39 முதல் 42 கிலோ வரை உடல் எடை இருப்பது கூட ஆரோக்கியம் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, அதிகப்படியான உடல் கொழுப்பு தொற்று அல்லாத நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் 13 வகையான புற்றுநோய்கள், வகை -2 நீரிழிவு நோய், இதய பிரச்னைகள் மற்றும் நுரையீரல் நிலைகள் ஆகியவை அடங்கும். இது குறைந்த வயதில் மரணம் ஏற்படுத்த வழிவகுக்கும்.

எல்லா விதத்திலும் வசதிகள் பெருகிக்கொண்டே வருவதும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணம். உடல் செயல்பாடுகள் என்பது இப்போதுள்ள குழந்தைகளிடம் குறைந்து வருகிறது. இதனால் சாப்பிடும்போது உடலில் சேரும் கலோரிகள் அப்படியே இருப்பதால், கொழுப்பு அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிக்க மற்றொரு காரணம் ஜங்க் ஃபுட்.  அளவுக்கு அதிகமாக கொழுப்பு நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், அவை செரிமானம் ஆகாமல் உடலின் பல இடங்களில் தேங்கி, குழந்தை குண்டாக காரணமாகிறது.

உடல் எடை அதிகரிப்பதால், ஒரு குழந்தைக்கு இதய நோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், படிப்பில் ஆர்வம் குறைதல், கவனச்சிதறல், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமின்மை போன்றவை ஏற்படலாம். உடல் பருமனாகும்போது, அந்த எடையை எலும்புகள் தாங்க முடியாமல் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். இதுபோன்ற பலவிதமான பிரச்னைகள் உடல் பருமனால் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

publive-image

எனவே, இதுபற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு ஏற்பட வேண்டும். அவர்கள் ஓடியாடி விளையாடுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். எந்நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளில் குழந்தைகள் விளையாடுவதற்கென்று கண்டிப்பாக விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும்.

சில குழந்தைகள் மரபு ரீதியில் பருமனாக இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் சரிசெய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

எனவே பெற்றோர் என்ற முறையில், ஒருவர் தன் குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் அதே நேரத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கான சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும்.

உணவில் அதிக காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச் சத்துகள் நிறைந்துள்ளன.

குழந்தைகள் அதிக அளவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு முக்கிய காரணம்.

பால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. பாலிலுள்ள கால்சியம், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கவும், அதே நேரத்தில் புரதம், மூளைத் திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது. தயிர், குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது.

முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அவைகளில் கால்சியம் மற்றும் அவற்றை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே முட்டையை காலை வேளையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்.

இதுதவிர பசலைக் கீரை, முட்டைக்கோஸ், முழு தானியங்கள், ஓட்ஸ், நட்ஸ், அக்ரூட் பருப்புகள் கொடுக்கலாம்.

மேலும் பருமனாக உள்ள குழந்தைகளை எளிய உடற்பயிற்சிகள் செய்ய ஊக்கப்படுத்தலாம். குழந்தைகள் தினமும் போதுமான நேரம் தூங்குகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உடல் பருமன் பெரியவர்களை மட்டுமல்ல சிறுவர்களையும் பாதிக்கும். கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment