கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில், சகானா’வாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து. இப்போது சன் டிவியின் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார்.
Advertisment
ஹிமா பிந்து ஆந்திராவை சேர்ந்தவர். தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமாவில் பிரபலமானவர்கள் என்பதால் இவருக்கு இயல்பாகவே நடிப்பு மீது என்பதால் ஆர்வம் வந்துவிட்டது.
சீரியலில் பிஸியாக நடிக்கும் ஹிமா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். புடவை, சுடிதார், வெஸ்டர்ன் டிரெஸ் என விதவிதமாக உடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை ஹிமா அடிக்கடி தன் இன்ஸ்டாவில் பகிர்வார்.
அப்படி முதல்முறை கேரளாவின் ஆலப்புழாவில், போட் ஹவுஸில் சென்ற போது எடுத்த புகைப்படங்களை ஹிமா தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த அழகான போட்டோஸ் இங்கே..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“