பேஸ்புக் நேரலையில் ரசிகர்களை சிலிர்க்கவைத்த இந்துஸ்தானி இசை

கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக எச்.சி.எல். நிறுவனம் தனது கச்சேரிகளை நடத்திக்கொண்டு வருகிறது. இந்திய பாரம்பரிய கலைகளை பெருமைப்படுத்தும் திறமைகளை அடையாளம் காணவும், மற்றும் மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தானி இசைப் பாடகி சாஸ்வதி பக்ச்சி

இந்துஸ்தானி இசைப் பாடகி சாஸ்வதி பக்ச்சி, எச்.சி.எல். பைதக் கச்சேரி தொடருக்காக பேஸ்புக் நேரலையில் நேற்று மாலை பாடியிருக்கிறார்.

சாஸ்வதி, கிரானா கராணா என்ற இசைவகையின் பாரம்பரிய பாடகர் ஆவார். மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்க்ரா சங்கீத் பரிஷத்தில் இருந்து சங்கீத் பிரபாரில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் கேந்த்ரா, கொல்கத்தா ஆகியவற்றில் தன் கலைத் திறமையை வெளிப்படுத்துகிறார்.

கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக எச்.சி.எல். நிறுவனம் தனது கச்சேரிகளை நடத்திக்கொண்டு வருகிறது. இந்திய பாரம்பரிய கலைகளை பெருமைப்படுத்தும் திறமைகளை அடையாளம் காணவும், மற்றும் மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தானி இசைப் பாடகி சாஸ்வதி பக்ச்சி பேஸ்புக் நேரலையில் நேற்று பாடினார்

இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, சென்னை, லக்னோ, நாக்பூர், மதுரை ஆகிய நகரங்களிலும், வெளிநாடுகளில் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களிலும் எச்.சி.எல். கச்சேரிகள் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

பல ஆண்டுகளாக, எச்.சி.எல் கச்சேரிகள் விதிவிலக்கான மற்றும்  வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு சிறந்த தளமாக அமைத்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஊக்கமளிக்கின்றனர்; பாடகர்கள் மட்டுமில்லாமல் நடன கலைஞர்கள், வாத்திய கலைஞர்களையும் அரங்கேற்றிவைக்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த தளத்தை அலங்கரிப்பதோடு, இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு புத்துயிர் அளிக்க பங்களித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hindustani singer saswati bagchi performed yesterday on facebook live

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express