Advertisment

அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!

மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா? உடனடியாக மண்ணை வாரி நிரப்பி விதைகளை நட்டு தண்ணீர் பாய்ச்ச கிளம்பிவிடாதீர்கள். அதற்கு முன்பு என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
home gardening, home terrace gardening, home terrace gardening ideas, home terrace garden, மாடித் தோட்டம், வீட்டுத்தோட்டம், அப்பார்ட்மெண்ட்களில் மாடித் தோட்டம், home terrace gardening ideas for beginner, home terrace gardening tips for beginners, appartment terrace gardening, lifestyle news, gardening lifestyle, மாடித் தோட்டம் அமைப்பது எப்படி

வீடுகளில் நிலம் காலியாக இருந்தால் மட்டுமே தோட்டம் அமைக்கலாம் என்ற கருத்தெல்லாம் இப்போது மாறிவிட்டது. அது கிராமப்புறமாக இருந்தாலும் நகர்புறமாக இருந்தாலும் மாநகரங்களில் அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட்டாக இருந்தாலும் மாடியில் எல்லோரும் மாடித் தோட்டம் அமைக்கலாம்.

Advertisment

இப்போது அப்பார்ட்மெண்ட்களிலும் மாடித் தோட்டம் அமைக்கும் முறை பெருகி வருகிறது. இந்த மாடித் தோட்டங்களால் என்ன நன்மை என்னவென்றால் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பூக்களை நீங்களே விளைவித்துக்கொள்ளலாம். அதைவிட, வீட்டு மாடி பசுமையாக இருப்பது பார்க்க மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இப்போது உங்களுக்கும் மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டதா? உடனடியாக மண்ணை வாரி நிரப்பி விதைகளை நட்டு தண்ணீர் பாய்ச்ச கிளம்பிவிடாதீர்கள். அதற்கு முன்பு ஒரு மாடி தோட்டம் அமைக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

மாடியில் தோட்டம் அமைக்கப் போகிறோம். அதனால், வெறும் மண்ணை தொட்டிகளில் நிரப்பி வைக்காதிர்கள். மண்ணில் இயற்கை உரங்கள் தேவை. அதற்காக மண்ணில் மக்கக்கூடிய பொருட்களான, காய்ந்த இலை, சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 15 நாட்கள் வரை மண்ணை மூடி வைத்துவிடுங்கள். பின்பு 15 நாட்கள் கழித்து அந்த மண்ணை தொட்டியில் தோட்டம் அமைப்பதற்கான பிளாஸ்டிக் பைகளில் நிரப்புங்கள். அதன் பிறகு, விதைகளை அல்லது செடிகளை நடலாம். அப்போதுதான் மாடித் தோட்டத்தில் செடிகள் வளமாக வளரும். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால், செடிகளை வளர்ப்பதற்கு என்றே கோகோ பிட், பிளாஸ்டிக் பைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டத்தில் செடிகள் வளர்ந்த பிறகு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது தண்ணீர் நிறைய ஊற்றாதீர்கள். நிலமாக இருந்தால் நிறைய தண்ணீர் உற்றினால் உறிஞ்சு கொள்ளும். இது மாடித்தோட்டம் என்பதால் சிறிதளவு தண்ணீர் ஊற்றுங்கள். அதிகமாக தண்ணீர் ஊற்றினால் தண்ணீர் தேங்கி செடி அழுகி விடும். அதனால், மாடித் தொட்டத்தில் செடிகளுக்கு குறைவாக தண்ணீர் ஊற்றுங்கள்.

அதே போல, மாடித் தோட்டத்தில் செடிக்கு நினைத்த நேரங்களில் எல்லாம் தண்ணீர் ஊற்றாதீர்கள். காலையிலும் மாலையிலும் தண்ணீர் ஊற்றுங்கள். வெயில் நேரத்தில் தண்ணீர் ஊற்றினால் வெப்பம் அதிகம் ஆகி செடிகள் வெந்து காய்ந்துபோக வாய்ப்புள்ளது. அதனால், பகலில் குறிப்பாக வெயில் நேரத்தில் தண்ணீர் ஊற்றாதீர்கள்.

ஆர்வத்தில், மாடித் தோட்டத்தை அமைத்துவிட்டு செடிகளுக்கு தண்ணீர் மட்டும் ஊற்றி வந்தால் போதாது. செடிகளை பராமரிக்க வேண்டும். மாடித் தோட்டத்தில் செடிகளை பூஞ்சை நோய்கள் தாக்குதலில் இருந்து பாதுகாக்க இயற்கை உரம் மற்றும் மருந்துக்களை தெளிக்க வேண்டும். மாடித் தோட்டத்தில் ரசாயன மருந்துக்களை எப்போதுமே பயன்படுத்த வேண்டாம்.

மாடித் தோட்டத்தில் செடிகள் வளர்ந்தபிறகு, வாரத்தில் ஒரு முறை வேப்பம் பிண்ணாக்கு கரைச அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து செடிகள் மீது தெளித்தால் பூஞ்சை நோய் தாக்காது.

இதற்கு அடுத்து, மாடித் தோட்டத்தில், செடிகளின் தன்மைக்கு ஏற்ப இடத்தில் வெயில்படுகிற மாதிரி வைக்க வேண்டும். சில செடிகள் வெப்பத்தை தாங்காது. அவற்றை நிழலாக உள்ள பகுதியில் வையுங்கள். வெப்பம் தாங்கக்கூடிய செடிகளை வெயில் படுகிற இடங்களில் வையுங்கள்.

செடிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் கிரீன் வலை அமைத்துகொள்ளலாம். இதனால், செடிகள் வெயிலில் பாதிக்காமல் இருக்கும்.

மாடித் தோட்டம் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், கிராமங்களை ஒட்டிய நகர்ப்புறம் என்றால் அருகே உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்துக்கு சென்று தோட்டக்கலை அலுவலரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். அங்கே மாடித் தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகளையும் விதைகள் மற்றும் கோக்கோபிட் ஆகியவற்றை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment