Advertisment

நெஞ்செரிச்சலுக்கு மாத்திரை வேண்டாம்: வீட்டிலேயே உள்ளது தீர்வு!

தொடர்ச்சியாக மாத்திரை மருந்துகளை சாப்பிட்டு வந்தால் உடல் உறுப்புகளில் பக்க விளைவுகள் ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
home remedies for heartburn

home remedies for heartburn

நெஞ்செரிச்சலை போக்க அடிக்கடி மாத்திரை சாப்பிடுவதால் உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டு, உயிரையும் அது சில சமையங்களில் பறித்துவிடும்.

Advertisment

இந்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் அல்சர், நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இறப்பு அதிவிரைவில் நெருங்கி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த உடல் உபாதைகளை போக்க கொடுக்கப்படும் மாத்திரை மருந்துகளே இறப்பிற்கான சதவிகிதத்தை அதிகரிக்கிறது. அதேபோல தொடர்ச்சியாக Proton pump inhibitors என்ற மருந்தை பயன்படுத்துவதால் இதய நோய்கள், சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்றில் புற்றுநோய் ஆகியவை ஏற்படும்.

இந்த மருந்து Prevacid, Prilosec, Nexium, Protonix போன்ற பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகிறது. இதே மருந்துகள் தான் நெஞ்செரிச்சலையும் தற்காலிகமாக சரி செய்கிறது.

இந்த மருந்துகளை குறைவாக எடுத்து கொண்டால் அல்லது தொடர்ச்சியாக பல மாதங்கள் வரை எடுத்து கொண்டாலும் இறப்பிற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஜூலை 2002 முதல் ஜூன் 2004 வரை 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் 157625 பேருக்கு Proton pump கொடுக்கப்பட்டது. பின் 56842 பேருக்கு புதிதாக H2 blocker என்ற மருந்து கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக 10 வருடங்கள் 214467 பேரை கண்காணித்து வந்ததில், H2 Blocker பயன்படுத்தியவர்களை காட்டிலும் proton pump பயன்படுத்தியவர்களுக்கு 17 சதவிகிதம் இறப்பு விகிதம் உயர்ந்துள்ளது.

ப்ரோட்டான் பம்ப் பயன்படுத்தியவர்களுள், ஆயிரத்துள் 15 பேருக்கு இருதய நோய்கள், 4 பேருக்கு சிறுநீரக நோய், 2 பேருக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இயற்கையான வழியில் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம். தொடர்ச்சியாக மாத்திரை மருந்துகளை சாப்பிட்டு வந்தால் உடல் உறுப்புகளில் பக்க விளைவுகள் ஏற்படும்.

இந்நிலையில், நெஞ்செரிச்சல் நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய சில உணவுகள் இங்கே...

இஞ்சி

நெஞ்செரிச்சல் போன்ற இரப்பை பிரச்சினைகளுக்கு இது இயற்கையான மருந்தாக பன்படுத்தப்படுகின்றது.

ஒட்ஸ்

இது வயிற்றில் உள்ள அமிலத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இவை அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

தானியங்கள்

அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் போன்றவை ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இது நெஞ்செரிச்சல் நோயாளிகளுக்கு உதவும்.

தயிர்

இது வயிற்று அமிலத்தை ஆற்றும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment