இனி புற்றுநோயை கண்டறிய ஒரேயொரு ரத்த பரிசோதனை போதும் : அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

ஒரேயொரு ரத்தப் பரிசோதனை மூலம் 8 வகையான புற்றுநோய்களை கண்டறியும் புதிய முறையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரேயொரு ரத்தப் பரிசோதனை மூலம் 8 வகையான புற்றுநோய்களை கண்டறியும் புதிய முறையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், அதன் மூலம், எந்த இடத்தில் புற்றுநோய் செல் வளர்ந்துள்ளது என்பதை கண்டறியவும் முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ரத்த பரிசோதனை CancerSEEK என்றழைக்கப்படுகிறது. இந்த பரிசோதனை மூலம் புற்றுநோய் செல் எந்தளவில் வளர்ந்துள்ளது என்பதை அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இச்சோதனை மூலம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், கணைய புற்றுநோய், குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறியலாம். இந்த 8 வகையான புற்றுநோய்கள் மூலமே அமெரிக்காவில் 60 சதவீத புற்றுநோயால் இறப்புகள் ஏற்படுகின்றன.

இந்த பரிசோதனை மற்ற புற்றுநோய் பரிசோதனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த பரிசோதனை மூலம் எந்த இடத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதை 99 சதவீதம் குறிப்பிட்டு சொல்ல முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

×Close
×Close