Advertisment

முடி உதிர்வதால் கவலையா? இந்த பழமையான வீட்டு வைத்தியம் உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும்!

கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன், ஏற்கனவே வளர்ந்த முடியை’ சுழற்சியின் டெலோஜென் பகுதிக்கு மிக விரைவாக நகர்த்துகிறது. இது பெண்களுக்கு அடிக்கடி நிகழ்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Homemade hair mask

Homemade hair mask with natural ingredients for hair growth in tamil

தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த ஊரடங்கு நமது வழக்கமான வாழ்க்கை முறையை தூக்கி எறிந்து, பலரிடையே மன அழுத்தத்திற்கு வழிவகுத்தது. மேலும் இந்த மன அழுத்தம் முடி உதிர்தலுக்கு பங்களித்தது. "கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன், ஏற்கனவே வளர்ந்த முடியை’ சுழற்சியின் டெலோஜென் பகுதிக்கு மிக விரைவாக நகர்த்துகிறது. இது பெண்களுக்கு அடிக்கடி நிகழ்கிறது என்கிறார் அழகுக்கலை நிபுணர் டாக்டர் கீதிகா மிட்டல் குப்தா.

Advertisment

கடந்த ஒரு வருடமாக இதை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என்றால், அதை எதிர்த்துப் போராட சில குறிப்புகள் இங்கே...

உங்கள் ஊட்டச்சத்தை கவனியுங்கள்

உங்கள் தலைமுடியை மீட்டெடுப்பதில் ஊட்டச்சத்து அவசியம். "மன அழுத்தம் காரணமாக முடி உதிர்ந்தால், அது மீண்டும்ஆரோக்கியமாக வளரும். ஆனால் ஊட்டச்சத்து அல்லது வெளிப்புற சூழல் மோசமாக பாதிக்கப்பட்டால், மீண்டும் வரும் முடியின் தரம் நிச்சயமாக பாதிக்கப்படும் என்கிறார் டாக்டர் சித்ரா ஆனந்த்.

"உங்களிடம் போதுமான அயோடின், கிரீன் டீ இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்தைப் பெற மஞ்சள், இஞ்சி, பூசணிக்காய் சாறுகள், லைகோபீன், ஐசோஃப்ளவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களை எடுத்துக் கொள்ளுங்கள்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

வீட்டு வைத்தியம் நல்ல பலன் தரும்

ஆரோக்கிய ஆலோசகர் நீதா பூபாலம், உங்கள் மேனியை புத்துயிர் பெறுவதை உறுதிசெய்ய எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களை பரிந்துரைக்கிறார். "குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு, குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்குங்கள். மேலும், உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடி வளர்ச்சியை மீட்டெடுக்க உதவுகிறது. உங்கள் கூந்தலுக்கு எளிமையான வீட்டில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்த முயற்சிக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் கலவையுடன், உலர்ந்த கூஸ்பெர்ரி அல்லது நெல்லிக்காய், உலர்ந்த முருங்கை இலைகள், உலர்ந்த வெட்டிவேர் வேர் மற்றும் ரோஸ்மேரி மூலிகையுடன் கறிவேப்பிலை சேர்த்து மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது" என்கிறார் நீதா.

உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும்

"புரதம் முடி வளர கட்டுமானத் தொகுதிகளை வழங்குகிறது. உங்கள் உணவில் இறைச்சி, முட்டை, மீன், பீன்ஸ், தானியங்கள் மற்றும் கொட்டைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் அதிகம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக அமினோ அமிலம் லைசின்’ முடி வளர்ச்சிக்கு முக்கியமானது.

இரும்புச்சத்து குறைபாடு’ டெலோஜென் எஃப்ளூவியத்துடன் (telogen effluvium) இணைக்கப்படலாம். எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் முடி உதிர்தலை தடுக்கும். சிவப்பு இறைச்சி, கல்லீரல், அடர் பச்சை இலை காய்கறிகள், பீன்ஸ் மற்றும் பருப்பு ஆகியவை இதில் அடங்கும்" என்று டாக்டர் கீதிகா அறிவுறுத்துகிறார்.

வெங்காய ஹேர் மாஸ்க்

வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து, சில துளிகள் ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எஸன்ஷியல் எண்ணெயைச் சேர்க்கவும். இதை 15 நிமிடங்களுக்கு உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்து, லேசான பாராபின் மற்றும் சல்பேட் இல்லாத ஷாம்பூவுடன் கழுவவும்.

முருங்கை ஹேர் மாஸ்க்

இரண்டு தேக்கரண்டி வெங்காய சாறு மற்றும் இரண்டு டீஸ்பூன் எள் எண்ணெய்யுடன், நான்கு தேக்கரண்டி முருங்கைப் பொடியை கலக்கவும். நீங்கள் ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எஸன்ஷியல் எண்ணெய் கூட சில துளிகள் சேர்க்கலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் பேக் போல 25 நிமிடங்கள் தடவவும். மென்மையான ஷாம்பூவுடன் கழுவவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment