நீளமான, அடர்த்தியான, கருகரு கூந்தல் வேண்டுமா? ஹேர் ஆயில் இப்படி யூஸ் பண்ணுங்க!

சில அடிப்படைப் பொருட்களை மட்டும் கொண்டு, எண்ணெயை வீட்டிலேயே எப்படிச் செய்யலாம் என்பதை பாருங்கள்!

Hair care tips
Homemade hair oil with natural ingredients for shiny and black hair

முடி உதிர்தல் என்பது இந்த நாட்களில் நம்மில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், உச்சந்தலையை மென்மையாக்குவதற்கும் ஒருவரின் தலைமுடிக்கு எண்ணெய் தடவுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், எண்ணெய்களை கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக, சுத்தமான தேங்காய் எண்ணெயில் சில ஆரோக்கியமான பொருட்களைக் கலந்து, அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

அவை உலர்ந்த உச்சந்தலையில் ஈரப்பதத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் கூந்தலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஊட்டமளிக்கிறது.

சில அடிப்படைப் பொருட்களைக் கொண்டு எண்ணெயை வீட்டிலேயே எப்படிச் செய்யலாம் என்பதை பாருங்கள்!

தேவையான பொருட்கள்

செம்பருத்தி மலர்கள் (20)

வேப்ப இலைகள் (30)

கறிவேப்பிலை (30)

வெங்காயம் (சிறியது 5)

வெந்தயம் (1 தேக்கரண்டி)

கற்றாழை (1 இலை)

மல்லிகைப் பூக்கள் (15-20)

தேங்காய் எண்ணெய் (1 லிட்டர்)

செய்முறை:

வெந்தயத்தை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கற்றாழையை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும்.

இதை ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும்.

எண்ணெய் பச்சை நிறமாக மாறும் வரை 30-45 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கவும்.

அதை குளிரவிடவும்.

வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.

அழகான, நீளமான, அடர்த்தியான, கருகரு கூந்தலுக்கு இந்த ஹேர் ஆயிலை கண்டிப்பா டிரை பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Homemade hair oil with natural ingredients for shiny and black hair