காலையில் நெல்லி எவ்ளோ நல்லது தெரியுமா? பயன்படுத்துவது எப்படி?

நெல்லிக்காயை நேரடியாக சாப்பிட்டு வர, முடி உதிர்தலை தடுப்பதற்கும், செறிமானத்தை அதிகரிக்கவும் , கண் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களிடம் பார்வை திறனை மேம்படுத்துவதிலும், தைராய்டு மற்றும் நீரழிவு நோய்க்கு எதிராகவும் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தியாவில் விளையும் பெரும்பாண்மையான காய்கள் மற்றும் பழ வகைகள் ஆரோக்கியமானவை மட்டுமல்லாது, பல நன்மை பயக்கும் பலன்களை வழங்கி வருகின்றன. இந்திய காய்கள் மற்றும் பழங்களில் அதிக அளவிலான ஆண்டிஆக்ஸிடண்டுகள் செறிந்திருப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டுபவைகளாக இருக்கின்றன.

அந்த வரிசையில், நெல்லிக்காயை நேரடியாக சாப்பிட்டு வர, முடி உதிர்தலை தடுப்பதற்கும், செறிமானத்தை அதிகரிக்கவும் , கண் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களிடம் பார்வை திறனை மேம்படுத்துவதிலும், தைராய்டு மற்றும் நீரழிவு நோய்க்கு எதிராகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. இவ்வாறு, பலன்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நெல்லிக்காயை மதிப்புக் கூட்டு பொருள்களாக்கி காலை வேலையில், எவ்வாறு சாப்பிடலாம் என விளங்கிறார், ஆயுர்வேத மருத்துவ நிபுணரான திக்‌ஷா பாவ்சர்.

நெல்லிக்காய் பொடி :

தினமும் காலையில், வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேன் அல்லது சுடுதண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய் ஜூஸ் :

20 மி.லி. நெல்லிக்காய் ஜூஸை சுடு தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் காலை வேளையில் குடித்து வரலாம்.

நெல்லிக்காய் லேகியம் :

லேகிய வகைகளின் முக்கிய மூலப் பொருளாக நெல்லிக்காய் உள்ளது. இதை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, ஒரு தேக்கரண்டி அளவுக்கு சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய் :

நெல்லிக்காயை சந்தையில் வாங்கி ஊறுகாயாக செய்தும் சாப்பிட்டு வரலாம். இது, குழந்தைகள் முதல் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது.

நெல்லிக்காய் மிட்டாய் :

நெல்லிக்காய்களை சிறு துண்டுகளாக வெட்டி, அவற்றை சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். நன்றாக உலர்ந்த பின், தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை பாகுடன் கலந்து நெல்லிக்காய் மிட்டாயாக சாப்பிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How consume amla daily diet health benifits

Next Story
கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர்… பாண்டவர் இல்லம் கயல் அழகு ரகசியம்Pandavar Illam Papri Ghosh Beauty Secrets Skincare Tips Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com