Advertisment

இந்த நேரத்தில் சூரிய ஒளியில் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தில் எப்படி அற்புதங்களைச் செய்யும்?

சூரியனில் இருந்து கிடைக்கும் இயற்கை ஒளி,வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுவதை விட பலவற்றைச் செய்கிறது.

author-image
WebDesk
New Update
இந்த நேரத்தில் சூரிய ஒளியில் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தில் எப்படி அற்புதங்களைச் செய்யும்?

நம்மில் பெரும்பாலானோர், சூரிய ஒளியை உடலில் வைட்டமின் டி உற்பத்தியுடன் தொடர்புப்படுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், இயற்கை ஒளியை உட்கொணர்வது அதை விட அதிகமாக உதவுகிறது. எனவே, நீங்கள் உங்கள் படுக்கைக்குள் குளிர்காலத்தை கழிக்க திட்டமிட்டால், அதை மறுபரிசீலனை செய்யலாம்.

Advertisment

ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் திக்ஸா பவ்சர், தினசரி சூரிய ஒளியில் இருப்பது ஏன் அவசியம் என்று கூறுகிறார். "வைட்டமின் டி, நோய்-எதிர்ப்பு மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் ஹார்மோன், இது நம் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் இங்கே உள்ளன

சூரிய ஒளியில் இருக்கும் புறஊதா கதிர்கள (UVA), நைட்ரிக் ஆக்சைடை அதிகரிக்கிறது – இது ஒரு வாசோடைலேட்டர் (இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் ஒன்று) - இது இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்துகிறது, மேலும் சுவாச விகிதம் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

பகலில் எப்போதும் இருக்கும் சிவப்பு நிறமாலை (red visible spectrum), நம் உடலின் ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மைட்டோகாண்ட்ரியா செயல்பாட்டைத் தொடுகிறது.

மன ஆரோக்கியத்திற்கு முக்கியமான செரோடோனின், மெலடோனின் மற்றும் டோபமைன் - நரம்பியல் கடத்திகளை உருவாக்க இயற்கை ஒளி உதவுகிறது.

நீல ஒளி, நம்மைத் தூண்டி விழித்திருக்கச் செய்கிறது. அதன் ஹார்மோன் உற்பத்தி திறன் காரணமாக இது பருவகால பாதிப்பு மற்றும் மனச்சோர்வுக்கும் பங்களிக்கிறது.

பகல் நேரத்தில் மெலடோனின் (தூக்க ஹார்மோன்) உருவாவதால், நமது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, தினசரி சர்க்காடியன் தாளத்தை ட்யூன் செய்கிறது.  

இருப்பினும், ஒருவர் அதிகமாக சூரிய ஒளியில் செல்லக்கூடாது. நேரடி சூரிய ஒளியில் பொறுப்பற்ற முறையில் சென்று எரிய ஆரம்பிக்க நான் அறிவுறுத்தவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

அதை எப்படி செய்வது?

உங்கள் நாளை மாற்றவும்; ஜிம்மிற்குப் பதிலாக வெளியில் பயிற்சி செய்வதன் மூலம் அதிக இயற்கை ஒளியைப் (நேரடி சூரிய ஒளியை அல்ல) பெறுவதில் கவனமாக இருங்கள்.

வெளியே நடந்து செல்லுங்கள்

நினைவில் கொள்ளுங்கள், இயற்கையான பகல் நேரத்தில், வைட்டமின் டி-யை விட அதிகமான பலன்கள் உள்ளது. எனவே வைட்டமின் D உடன் கூடுதலாகச் சேர்ப்பது உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

மருத்துவர் பாவ்ஸரின் கூற்றுப்படி, காலையிலும் {சூரிய உதயத்திற்குப் பிறகும், காலை 8 மணிக்கு முன்பும்} மாலையிலும் (சூரியன் மறையும் நேரத்தில்) 25-30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment