Advertisment

விமான பயணத்தில் கோரோனா வைரஸ் பரவாமல் எவ்வாறு தவிர்ப்பது ?

கையுறைகள் இன்னும் மோசமானது. ஏனென்றால் கையுறையின் உள்ளே உங்கள் கைகள் வேக்கையின் காரணமாக வியர்த்து இருக்கும். இது நுண்ணுயிர் வளர மிகவும் நல்ல சூழலை ஏற்படுத்தும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவில் 6 பேருக்கு கொரொனோ பாதிப்பு உறுதி: 4 நாடுகளின் பயணிகளுக்கு விசா ரத்து

Kyunghee Park

Advertisment

How to avoid Coronavirus on flights : முகமூடிகளையும் ரப்பர் கையுறைகளையுன் மறந்து விடுங்கள். கோரோனா பரவாமல் தவிர்க்க நல்ல வழி அடிக்கடி கைகழுவுவது தான் சிறந்தது என்கிறார் உலக விமான போக்குவரத்து நிறுவனத்தின் மருத்துவ ஆலோசகர்.

விமான இருக்கைகளிலோ armrest எனப்படும் இருக்கை கை வைப்பான்களிலோ கோரோனா வைரஸ் கிருமிகளால் அதிக நேரம் வாழமுடியாது. எனவே விமானங்களில் இந்த நோய் தொற்றை எடுத்துசெல்லக்கூடிய மிகப்பெரிய ஆபத்து என்பது அடுத்தவர்களுடனான உடல் தொடர்பு தான், என சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (International Air Transport Association) ஆலோசகரான மருத்துவர் டேவிட் போவெல் தெரிவிக்கிறார். முகமூடிகளும், கையுறைகளும் கிருமிகள் பரவ துணைபுரிகின்றன மாறாக அவற்றை தடுப்பதில்லை என்கிறார்.

கோரோனா வைரஸ் தாக்கத்தின் வேகம் அதிமாகும் சூழலில், பல விமான நிறுவனங்கள் சீனாவிர்கான தங்கள் விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வருகின்றன. மருத்துவர் போவெல் உடனான ஒரு நேர்முகத்தின் சுருக்கமான பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விமான பயணத்தின் போது நோய்க்கிருமி தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா?

விமான பயணத்தின் போது ஒருவருக்கு ஒரு கடுமையான நோய்க்கிருமி தொற்று ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு. ஒரு நவீன ரக விமானத்தில் உள்ள காற்றோட்டம் என்பது ஒரு சினிமா கொட்டகையிலோ அல்லது ஒரு அலுவலக கட்டிடத்திலோ உள்ளது போன்று இருப்பதில்லை. மறுசுழற்ச்சி செய்த காற்று மற்றும் புதிய காற்று ஆகியவற்றின் சரிசமமான சேர்க்கையாகத்தான் இந்த காற்று இருக்கும்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

அதிலும் மறுசுழற்ச்சி செய்த காற்று, அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தும் வடிகட்டிகளை போன்று விமானத்தில் உள்ள வடிகட்டிகளால் வடிக்கட்டப்படுகிறது. எனவே விமானத்தில் உள்ள காற்றோட்டம் 99.97 சதவிகிதம் வைரஸ் மற்றும் இதர அசுத்தங்கள் இல்லாத காற்றாகத்தான் இருக்கிறது. எனவே விமான பயணத்தின் போது நோய் தொற்று ஏறபட வாய்ப்புள்ளதா என்றால் அது அங்கு உள்ள காற்றின் மூலமாக ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக மற்றவர்களால் வேண்டுமானால் ஏற்பட வாய்ப்புள்ளது.

விமானத்தில் உள்ள இருக்கைகள், கை வைப்பான்கள் அல்லது விமானத்தில் உள்ள வேறு ஏதேனும் பொருட்களை தொடுவதால் இந்த நோய் தொற்று வர வாய்ப்புள்ளதா?

நோய்கிருமிகள் மற்றும் இதர நுண்ணுயிர்கள் நம்மை போன்ற உயிருள்ள பரப்புகளில் தான் உயிர்வாழ ஆசைபடும். எனவே உயிர் இல்லாத சில உலர்ந்த பரப்புகளைவிட, யாரோ ஒருவருடன் கைகுலுக்குவது தான் மிகவும் ஆபத்தானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

விமான பயணத்தின் போது உங்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முக்கியமாக என்ன செய்யவேண்டும்?

கை சுத்தம்: மக்கள் நினைப்பதற்க்கு மாறாக கைகளின் மூலம் தான் இந்த வகை நோய் தொற்றுகள் திறம்பட பரவும். எனவே முக்கியமானது என்னவென்றால் கைகளை அடிக்கடி கழுவுதல் அல்லது கைகளை சுத்தமாக வைத்திருத்தல். உங்கள் முகத்தை தொடுவதை தவிருங்கள். இருமவோ அல்லது தும்மவோ செய்தால் கைக்குட்டையை உபயோகப்படுத்துங்கள். கைகளை கழுவி உலரச்செய்வது சிறந்தது. அதை செய்ய முடியவில்லை என்றால் ஆல்ககால் (alcohol) கொண்டு கைகளை சுத்தம் செய்வது நல்லது.

முகமூடிகள் மற்றும் கையுறைகள் அணிவதால் நோய் தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து தடுக்க முடியுமா?

முகமூடிகளை பொருத்தவரை அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து மிக குறைந்த சான்றுகளே உள்ளன. அனைத்து நேரங்களிலும் முகமூடிகளை அணிவது பயனற்றது. கையுறைகள் இன்னும் மோசமானது. ஏனென்றால் கையுறையின் உள்ளே உங்கள் கைகள் வேக்கையின் காரணமாக வியர்த்து இருக்கும். இது நுண்ணுயிர் வளர மிகவும் நல்ல சூழலை ஏற்படுத்தும்.

தமிழில் எஸ். மகேஷ்

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment