Advertisment

உங்கள் பயணம் இனிதாகட்டும்: ரயிலில் முன்கூட்டியே இருக்கை வசதியை கண்டறிய 5 சுலப வழிகள்

ரயிலில் இருக்கை விவரம் மற்றும் கட்டண விவரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவது எப்படி என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? அப்படியெனில் இந்த செய்தி உங்களுக்குத்தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி, ரயில்வே முன்பதிவு, ரயில் இருக்கை விவரம்

ஐஆர்சிடிசி யின் அடுத்த தலைமுறை e-Ticketing, ஐந்து எளிய முறைகளில் ரயிலில் இருக்கைகள் விபரம் மற்றும் கட்டணம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

கோடை அல்லது குளிர்கால விடுமுறை காலங்களில் இந்திய ரயில்வேயில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வது என்பது ஒரு கடினமான பணியாக இருக்கும். திடீர் தேவை மற்றும் பயணச்சீட்டு காத்திருப்பு பட்டியல் ஆகியவற்றை தவிர்பதற்காக பயணிகள் தங்கள் ரயில் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவது எப்போதுமே சிறந்தது. பயன்படுத்துவதுக்கு எளிதாக உள்ள இந்திய தொடர்வண்டி உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) அதிகாரப்பூர்வ இணையதளம் பயணிகளுக்கு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு முன்பே இருக்கை விவரங்கள், ரயில் கட்டண விவரம் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வசதி மற்றும் பல வசதிகளை வழங்கி வருகிறது.

ரயிலில் இருக்கை விவரம் மற்றும் கட்டண விவரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவது எப்படி என்ற குழப்பத்தில் உள்ளீர்களா?  அப்படி என்றால் பின்வரும் ஐந்து எளிய வழிமுறை மூலம் நீங்கள் அதை அறியலாம்.

  1. ஐஆர்சிடிசி யின் இணையதளத்தில் www.irctc.co.in உங்கள் கணக்கில் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உழ்நுழைந்து கொள்ளவும்.
  2. Book Your Ticket Page ல் அனைத்து தேவையான தகவல்களையும் நிரப்பி கொள்ளவும்.
  3. அடுத்து ‘Find Trains என்பதை சொடுக்கவும்.
  4. ரயில்களின் பட்டியல் திரையில் தோன்றும்.
  5. ‘Check Availablity and Fare என்பதை சொடுக்கி இருக்கை விபரம் மற்றும் கட்டணம் குறித்து தெரிந்து கொள்ளவும்.

பயணிகள் இந்தியன் ரயில்வேயின் இணையதள முகவரி மற்றும் IRCTC Rail Connect App ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கை விவரம், கட்டண விவரம் மற்றும் ரயில் பயனச்சீட்டுகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான ரயில்வே அமைச்சகம் தாள்கள் இல்லாத பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ரயில் பயண்ச்சீட்டு முன்பதிவுக்கு e-wallets, கடன் அட்டை (credit cards), டெபிட் அட்டை (debit cards) ஆகியவற்றை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment