Advertisment

சர்க்கரை ரேஷன் கார்டு டூ அரிசி ரேஷன் கார்டு: எப்படி மாற்றுவது?

சர்க்கரை ரேஷன் கார்டு டூ அரிசி ரேஷன் கார்டாக மாற்றுவது என்பது மிகவும் சுலபம். நீங்களே வீட்டில் இருந்தே ஆன்லைனில் ரேஷன் கார்டு வகையை மாற்றிக்கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to ration card type change, how to ration smart card type change, PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC, ரேஷன் கார்டு வகை மாற்றுவது எப்படி, சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி, ரேஷன் அட்டை வகை மாற்றம், தமிழ்நாடு, NPHH - S ration card change to NPHH ration card, ration card change, tamil nadu, tnpds

ரேஷன் கார்டை நாம் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமல்ல, சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் பயன்படுத்துகிறோம்.

Advertisment

ரேஷன் கார்டு சாமானிய மக்கள் பலருக்கும் நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க பயன்படுகிறது. இந்தியாவில் ரேஷன் கார்டு குடும்பத்தின் வருவாயை பொறுத்து 5 வகையான கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து வகையான கார்டுகள் என்ன உங்களிடம் இருக்கும் கார்டு எந்த வகை அதற்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம். அதில் உங்களுக்கு ஏற்ற வகை ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஒரு வேளை உங்களுடைய குடும்ப அட்டை சர்க்கரை அட்டையாக இருந்தால், அதனை அரிசி வகை ரேஷன் கார்டாகவும் மாற்றிக் கொள்ளலாம். உங்களுடைய குடும்ப அட்டையை எப்படி அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக தமிழ்நாட்டில் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவை PHH, PHH-AAY, NPHH, NPHH-S,NPHH-NC என்று 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன.

இதில், PHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும். இந்த கார்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

PHH-AAY என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இந்த ரேஷன் கார்டுக்கு 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

NPHH என்று இருந்தால் இந்த ரேஷன் கார்டுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

NPHH-S என்ற குறிப்பிட்டிருந்தால் இந்த ரேஷன் கார்டுக்கு அரிசி தவிர, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். அதே நேரத்தில் இந்த அட்டைக்கு முன்னுரிமை இல்லை.

NPHH-NC என்று குறிப்பிடப்பட்டிருந்தால், இந்த ரேஷன் கார்டுக்கு எந்த பொருட்களையும் பெற முடியாது. இந்த வகையான ரேஷன் அட்டையை ஒரு அடையாள ஆவணமாகவும் முகவரி சான்றாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும். ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வாங்க முடியாது.

ஒருவேளை நீங்கள் வாங்கியுள்ள ரேஷன் கார்டு உங்கள் வருமானத்தைப் பொறுத்து அமையாமல் தவறுதலாக சர்க்கரை அட்டையாக வாங்கிவிட்டிருந்தால் NPHH-S என்று குறிப்பிடப்பட்ட அட்டையை வாங்கியிருந்தால் அதை அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி மாற்றுவது என்பது ஆன்லைன் முறையிலும், ஆஃப் லைனிலும் மாற்றிக் கொள்ளலாம்.

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக ஆஃப்லைனில் மாற்ற வேண்டும் என்றால் அதாவது வேறு வகையான அட்டையாக மாற்ற வேண்டும் என்றால்ல் அதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களை இணைத்து தாலூகா அலுவலகத்தில் உள்ள TSO பிரிவில் கொடுக்க வேண்டும்.

நீங்கள் கொடுத்த விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் நீங்கள் கேட்ட ரேஷன் கார்டு வகைக்கு மாற்றம் செய்யப்படும்.

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக ஆன்லைனில் மாற்ற வேண்டும் என்றால் முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். ஆன்லைனில் இந்த மாற்றம் செய்ய வேண்டுமெனில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்த செல்போன் எண் தேவை. அதனால், மொபைல் போனையும் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பயனாளர் நுழைவு என்ற ஆப்சனை கிளிக் செய்து, அதில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களை பதிவிடுங்கள். பிறகு, கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து, பதிவு செய் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.

இதையடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதை பதிவு செய்து கிளிக் செய்யுங்கள்.

இதையடுத்து வரும் அடுத்த பக்கத்தில், கீழே உள்ள அட்டை பிறழ்வுகள் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.

பின்னர், புதிய கோரிக்கை என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் குடும்பத் தலைவர் பெயர், அட்டை வகை மாற்றம், சிலிண்டர் எண்ணிக்கை மாற்றம், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம், குடும்ப உறுப்பினர் சேர்க்கை என்ற பல ஆப்சன்கள் இருக்கும். அவற்றில் அட்டை வகை மாற்றம் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.

அதில் தற்போது உள்ள உங்களுடைய கார்டு என்ன வகை, அதை என்ன வகை கார்டாக மாற்ற விரும்புகிறீர்கள் என்பது கட்டத்தில் வரும்.

சில நேரங்களில் இந்த மாற்றம் செய்ய முடியாமல் போகலாம். இந்த ஆப்சன் பிளாக் செய்யப்பட்டிருக்கும். ஆக அவ்வப்போது இந்த இணையத்தில் சென்று நீங்கள் வருகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஏனென்றால், பல நேரங்களில் NPHH-NC என்ற கார்டு அடையாள முகவரிக்கான சான்றாக மட்டுமே பயன்படுத்தப்படும் அட்டை மட்டுமே ஆப்சனாக இருக்கலாம்.

ஒருவேளை, ரேஷன் கார்டு வகையை மாற்றம் செய்கிற ஆப்சன் இருந்தால், மாற்றம் செய்யக்கூடிய அட்டையை கொடுத்து, உறுதிப்படுத்தல் என்பதன் கீழ் உள்ள பாக்ஸை கிளிக் செய்து, பதிவு செய்யுங்கள்.

இதையடுத்து, செயல்பாட்டுக்கு பின்னர் உங்களுக்கு குறிப்பு எண் ஒன்று வரும். அதை பத்திரமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுடைய ரேஷன் கார்டு வகை மாற்றம் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்ற ஸ்டேட்டஸை பார்க்க முடியும்.

அவ்வளவுதான், சர்க்கரை ரேஷன் கார்டு டூ அரிசி ரேஷன் கார்டாக மாற்றுவது என்பது மிகவும் சுலபம். நீங்களே வீட்டில் இருந்தே ஆன்லைனில் ரேஷன் கார்டு வகையை மாற்றிக்கொள்ளலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Ration Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment