Advertisment

மருந்து வேண்டாம்; மாத்திரை வேண்டாம்..! கவிழ்ந்து படுத்து ஆக்சிஜன் அளவை அதிகரிப்பது எப்படி?

author-image
WebDesk
New Update
மருந்து வேண்டாம்; மாத்திரை வேண்டாம்..! கவிழ்ந்து படுத்து ஆக்சிஜன் அளவை அதிகரிப்பது எப்படி?

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தங்கள் ஆக்சிஜன் அளவை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், ஒருவர் கவிழ்ந்து படுத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆக்சிஜன் அளவை மேம்படுத்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.

Advertisment

சுகாதாரத் துறை அமைச்சகம் சமீபத்தில் கவிழ்ந்து படுக்கும் நிலையை செய்வது எப்படி என படிப்படியான ஒரு வழிகாட்டியைப் பகிர்ந்து கொண்டது. இந்த கவிழ்ந்து படுக்கும் நிலை என்பது சுவாச வசதியையும் ஆக்ஸிஜனையும் மேம்படுத்துவதற்கான மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட படுக்கை நிலை. எனவே, இது கோவிட்-19 நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் சுயமாக கவிழ்ந்து படுக்கும் நிலையை மேற்கொள்ளச் செல்வதற்கு முன்பு இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:

இதற்கு உங்களுக்கு தலையணைகள் தேவை - ஒன்று கழுத்துக்குக் கீழும், ஒன்று அல்லது இரண்டு தலையணைகள் மார்புக்கு கீழும் தொடைகளுக்கும் மேலும் இருக்க வேண்டும். முழங்காள்களுக்கு கீழே இரண்டு தலையணைகள் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சுயமாக கவிழ்ந்து படுக்கும் நிலைய பின்வருமாறு மேற்கொள்ள வேண்டும்; ஒவ்வொரு நிலையிலும் ஒருவர் 30 நிமிடங்களுக்கு மேல் செலவிடக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது:

  • உங்கள் வயிற்றை அழுத்தி கவிழ்ந்து படுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் வலது பக்கம் ஒருக்களித்து படுங்கள்.
  • உங்கள் கால்களை முன்னால் நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்
  • இடது பக்கம் ஒருக்களித்து படுத்துக்கொள்ளுங்கள்.
  • மீண்டும் வயிறு பகுதி தரையில்படுமாறு கவிழ்ந்து படுத்துக் கொள்ளுங்கள்.

கவிழ்ந்து படுக்கும்போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்:

  • உணவுக்குப் உட்கொண்ட பிறகு ஒரு மணி நேரம் கவிழ்ந்து படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • எளிதில் தாங்கக்கூடிய அளவில் பல முறை கவிழ்ந்து படுப்பதை தொடருங்கள்.
  • ஒருவர் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை, பல சுழற்சிகளில், வசதியாக உணரும் வகையில் கவிழ்ந்து படுக்க வேண்டும்.
  • தலையணைகள் அழுத்தும் பகுதிகளை மாற்றவும் சௌகரியத்துகாக சிறிது சரிசெய்யலாம்.
  • உடலில் புண்கள் அல்லது காயங்கள் மற்றும் குறிப்பாக எலும்பு பகுதிகளில் எந்த அழுத்தம் இருந்தாலும் கவனமாக இருக்கவும்.

கவிழ்ந்து படுக்கிற நிலையை யார் தவிர்க்க வேண்டும்?

இது போன்ற நிலைமைகளில் கவிழ்ந்து படுக்கும் நிலையை தவிர்க்கப்பட வேண்டும்:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கவிழ்ந்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ஆழ்ந்த இரத்த உறைவு இருப்பவர்கள் (48 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள்) தவிர்க்க வேண்டும்.
  • முக்கிய இதய நோய் பிரச்னைகள் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
  • பலவீனமான முதுகெலும்பு உள்ளவர்கள், தொடை எலும்பு அல்லது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் கவிழ்ந்து படுக்கும் நிலையை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.



    "தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Covid 19 Healthy Life Health Tips Coronaviurs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment