Advertisment

மழைக் காலத்தை ஆரோக்யமாக எதிர்கொள்வது எப்படி?

ஆஸ்துமா, டி.பி பிரச்னை உள்ளவர்கள் இந்த செடியில் இருந்து வெளியாகும் காற்றை சுவாசிப்பது நல்லது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today chennai weather

Today chennai weather

வெயில் காலத்தை கூட நாம் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், மழைக் காலத்தில் ஏகப்பட்ட சிக்கல்களை நாம் சந்திக்க நேரிடும். துவைத்த துணி கூட அவ்வளவு சீக்கிரத்தில் காயாது. பிளான் பண்ணி நமது வேலைகளை செய்யாவிட்டால், மழைக் காலத்தில் சந்தியில் தான் நிற்க நேரிடும்.

Advertisment

மழை மற்றும் குளிர் காலங்களில் தான் நோய்த் தொற்றுகள் அதிகம் பரவி பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். கொத்து கொத்தாக மக்களை காவு வாங்கும். இதில் வைரஸ் கிருமிகள் எளிதில் பரவக் கூடியது.

கோடை காலத்தில் வருவதை விட, ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை குளிர் காலத்தில் சட்டென்று தாக்கிவிடும். குளிர் காலங்களில் முடிந்தவரை வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருப்பது அவசியம்.

சுடு தண்ணீர் என்றாலே சிலர் முகத்தை சுழிப்பார்கள். ஆனால், மழைக் காலத்தில் சுடு தண்ணீர் எவ்வளவு பெரிய ஆபத்பாந்தவன் தெரியுமா? பல நோய்களை இது நம்மிடம் அண்டவிடாமல் செய்கிறது. அதையும் மீறி அண்டும் தொற்றுகள் மேலும் தீவிரமாகாமல் போகச் செய்கிறது. ஆக, நன்கு காய்ச்சிய நீர் மிக மிக முக்கியம்.

மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் ‘சி’ சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

துளசி செடியை வெயில் காலத்தில் அதிகமாக பார்க்க முடியாது. காய்ந்து போய் இருக்கும். ஆனால், மழை காலத்தில் மிகவும் செழிப்பாக வளரக் கூடிய செடி இது. இருமல், சளி, ஆஸ்துமாவிற்கு துளசியே சிறந்த மருந்து. சுவாச உறுப்புகளில் பிரச்னை உள்ளவர்களுக்கும் இது மிகவும் சிறந்தது. நம்முடைய முன்னோர் காலத்தில் எல்லாருடைய வீட்டிலும் துளசி மாடம் இருக்கும். தினமும் காலை அதனை சுற்றி கடவுளாக வழிபடுவது நம்முடைய வழக்கம். கடவுள் பக்தி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதில் உள்ள மருத்துவ குணம்தான் முக்கியகாரணம்.

மழை காலத்தில் நம்மை சுற்றியுள்ள காற்றில், பல மாசுக்கள் தூசுகள் இருக்கும். அது நம்முடைய சுவாசத்தை பாதிக்கும். துளசி செடியில் இருந்து வெளியாகும் காற்று, நம்முடைய சுவாச உறுப்புகளை சுத்தமாக்கும். ஆஸ்துமா, டி.பி பிரச்னை உள்ளவர்கள் இந்த செடியில் இருந்து வெளியாகும் காற்றை சுவாசிப்பது நல்லது. துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல் போன்ற பிரச்னை இருக்காது.

ஒரு சிலருக்கு, தலையில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளும். மேலும் மழை காலத்தில் தலை குளிக்கும் போது தலையில் உள்ள ஈரம் எளிதில் காயாது. இதன் காரணமாகவும் சளி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆயுர்வேத கடைகளில் உள்ள ரசனாதி பொடியை கொஞ்சம் எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளலாம். இது தலையில் உள்ள தேவையற்ற தண்ணீரை உறிந்துக் கொள்ளும். இதில் 26 மூலிகைகள் உள்ளன. சித்தரத்தை அதிகமாக சேர்க்கப்பட்டு இருக்கும் மருந்து என்பதால் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்னை ஏற்படாது. மழை காலத்தில் சீரகம், மிளகு, இஞ்சி, அண்ணாசிப் பூ போன்றவற்றை நாம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.

Lifestyle Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment