Advertisment

உங்களைக் காயப்படுத்திய நபரைப் பழிவாங்கத் தோன்றுகிறதா? அதற்கு முன்பு இதைக் கொஞ்சம் பாருங்க...

How to forgive emotional health mental health Tamil News நீங்கள் ஒருவரை மன்னிக்க முடிந்தால், அவர்களுடைய போராட்டங்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to forgive emotional health mental health Tamil News

How to forgive emotional health mental health Tamil News

How to forgive emotional health mental health Tamil News : கடந்த காலத்தில் உங்களுக்கு வலியை ஏற்படுத்திய, உங்கள் கண்ணீருக்குக் காரணமான ஒருவரை முழுமையாக மன்னிக்க முடியுமா? பெரும்பாலான மக்கள் அதிர்ச்சியிலிருந்து வெளியேறுவது மிகவும் சவாலான ஒன்று. அதிலும் தங்களுக்கு அன்புக்குரியவர்களால் ஏமாற்றப்பட்ட உணர்வு நீங்க வடுவாக இருக்கும்.

Advertisment

அப்படி பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் கோபம் மற்றும் மனக்கசப்பைத் தக்கவைக்க வேண்டுமா அல்லது எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்ற முரண்பாடு அவர்களுக்குள் எழும். ஆனால் ஏமாற்றப்படும்போது, ​​குறிப்பாக நெருக்கமான உறவில் இருக்கும் நபர் அப்படிச் செய்யும்போது, விலகவும் முடியாமல் திரும்ப பேசவும் முடியாமல் தவிக்கும் சூழ்நிலையும், அதனால் அவர்களைப் பழி வாங்கும் உணர்வுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இருந்தாலும்கூட, நீங்கள் உண்மையிலேயே எதிர்மறை உணர்வுகளிலிருந்து வெளியே வர விரும்பினால், அந்த நபரை மன்னிப்பதைக் கருத்தில் கொள்வது அவசியம். மன்னிப்பு என்பது நிச்சயமாக உங்கள் எதிர்காலத்தை நன்மையாக்கும் ஓர் சிறந்த வழி.

ஒருவரை மன்னிக்கும் செயல் உங்களுக்கும் அந்த நபருக்கும் நிச்சயம் நன்மை பயக்கும். இது உங்கள் உணர்ச்சிப்பூர்வமான பொறுப்பையும் முதிர்ச்சியையும் காட்டுகிறது மற்றும் நீங்கள் எந்த வருத்தமும் இல்லாமல் சந்தோஷமாக வாழ அனுமதிக்கிறது.

அதெல்லாம் சரிதான். ஆனால், ஒருவரை எப்படி மன்னிப்பது என்பது பலருக்கும் எழும் கேள்வி. அதற்கான மூன்று குறிப்புகள் இங்கே:

நீங்கள் யார் என்பதை அறிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் யார், உங்கள் விருப்பு வெறுப்புகள் என்னவென்று உங்களுக்குத் தெரிந்தால், நிச்சயம் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிவது சுலபமாக இருக்கும். 'எனக்கு என்ன தகுதி இருக்கிறது?’, ‘என்ன தேவை உள்ளது?’ என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே படிப்பது அவசியம்.

உங்களுடைய உங்கள் எந்தப் பகுதியும் உங்கள் எதிரி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். நல்ல ஆற்றல்கள் உங்களைச் சுற்றி வர அனுமதிக்கவும், பாசிட்டிவ் எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதைப் பார்க்கவும். உங்களால் இதைச் செய்ய முடிந்தால், உங்களுக்குத் தவறு செய்தவர்களை நீங்கள் மன்னிக்க எளிதாக இருக்கும். அப்படி இல்லை என்றாலும், அவர்கள் உங்கள் வாழ்க்கையை நல்ல நினைவுகளோடு விட்டுவிட்டார்கள் என்பதை அறிந்து முன்னேற்றுப் பாதையில் பயணிக்க முடியும்.

மற்றவர்கள் தங்கள் சொந்த கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்

பெரும்பாலும், நமக்கு அநீதி இழைத்தவர்கள் தங்கள் சொந்த போராட்டங்களையும் பாதுகாப்பின்மையையும் அவர்கள் நம்மீது முன்வைப்பது வழக்கம். அன்பு, அக்கறை மற்றும் இரக்கத்துடன் அவர்களை அணுகுங்கள். அவர்களின் நிலையையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒருவரை மன்னிக்க முடிந்தால், அவர்களுடைய போராட்டங்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். அவர்களை அன்புடன் அணுகுங்கள். இது உங்கள் இருவருக்கும் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.

தொழில்முறை உதவியாளரை நாடுங்கள்

வாழ்க்கை சுமை மிக அதிகமாக இருக்கும்போது, ​​அந்தப் பாதையில் விழுவது எளிது. உங்கள் தேவைகளை கவனத்தில் கொள்ளுங்கள். யாராவது உங்களுக்கு ஏற்படுத்திய காயம் தாங்க முடியாத அளவுக்கு இருந்தால், தொழில்முறை உதவியாளரை நாடுங்கள். மன நல்வாழ்வைச் சுற்றி நிறையக் களங்கங்கள் உள்ளன. ஆனால், அதைப் பெரிதாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. வெளிப்புற அழுத்தத்தைத் தடுத்து உங்களை முதலில் கவனித்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று மனநல ஆலோசகரை சந்திக்காமல் விட்டுவிடாதீர்கள். அது உங்கள் ஆரோக்யத்திற்குதான் கேடு விளைவிக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life Relationship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment