Advertisment

கோபமான பாஸ், மிக மோசமான சூழ்நிலை, தப்பிப்பது எப்படி?

How to handle Angry boss at Office Relationship Tamil News How to handle Angry boss at Office Relationship Tamil News : எழுந்தும் எழாமலும், குளித்தும் குளிக்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் என எல்லா வேலைகளையும் அரைகுறையாக அவசர அவசரமாகச் செய்து அலுவலகத்திற்குள் நுழைந்தால், அங்கு டென்ஷனான பாஸ் உங்களுக்காக ஆப்பு வைக்கக் காத்துக்கொண்டிருப்பார். 'தினமும் இந்த வேலை எதுக்குடா' என்று நொந்து நூடுல்ஸாகும் தருணங்கள் ஏராளம். உங்களுடைய மேலதிகாரி முரட்டுத்தனமாக இருக்கலாம். அவர்கள் நினைத்தால் உங்கள் அலுவலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையையும் கடுமையாக்கிவிட முடியும். ஆனால், அதுவே  நீங்கள் அவர்களுடன் நல்ல உறவிலிருந்தால், நிலைமை அப்படியே வேறாகும் அல்லவா? கோபமான மேலதிகாரியை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கான சில எளிய குறிப்புகள் இங்கே.

author-image
WebDesk
New Update
How to handle Angry boss at Office Relationship Tamil News

How to handle Angry boss at Office Relationship Tamil News

How to handle Angry boss at Office Relationship Tamil News : எழுந்தும் எழாமலும், குளித்தும் குளிக்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் என எல்லா வேலைகளையும் அரைகுறையாக அவசர அவசரமாகச் செய்து அலுவலகத்திற்குள் நுழைந்தால், அங்கு டென்ஷனான பாஸ் உங்களுக்காக ஆப்பு வைக்கக் காத்துக்கொண்டிருப்பார். 'தினமும் இந்த வேலை எதுக்குடா' என்று நொந்து நூடுல்ஸாகும் தருணங்கள் ஏராளம். உங்களுடைய மேலதிகாரி முரட்டுத்தனமாக இருக்கலாம். அவர்கள் நினைத்தால் உங்கள் அலுவலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையையும் கடுமையாக்கிவிட முடியும். ஆனால், அதுவே  நீங்கள் அவர்களுடன் நல்ல உறவிலிருந்தால், நிலைமை அப்படியே வேறாகும் அல்லவா? கோபமான மேலதிகாரியை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கான சில எளிய குறிப்புகள் இங்கே.

Advertisment

உங்கள் மேலதிகாரி உங்களை தாறுமாறாக கிழித்து தொங்கவிடும் தருணங்கள் உங்களுக்கு கடினமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் அவரைப் பழிவாங்கத் தூண்டும். அதற்கெல்லாம் உடனடியாக ரியாக்ட் செய்யாதீர்கள். என்னவேண்டுமானாலும் திட்டிக்கொள்ளட்டும், ஆனால் உங்கள் உடல் மொழி மற்றும் முகபாவனையுடன் அவர் சொல்வதைத்தான் கேட்கிறீர்கள் என்பதை மேலதிகாரிக்குத் தெரியப்படுத்துங்கள். அவர் இடத்தைவிட்டு வெளியேறிய பிறகு, உங்கள் கோபங்களை தன்னந்தனியே அல்லது நண்பர்களிடம் கூறி வெளியேற்றிவிடுங்கள்.

கேட்பது போல் பாவனை செய்தாலும், மேலதிகாரி என்ன சொல்ல வருகிறார் என்பதை மட்டும் உள்வாங்கி அவர் சொன்ன வேலைகளை அல்லது தவறுகளைத் திருத்திக்கொள்வது மிகவும் முக்கியம். இது, நிச்சயம் உங்களுக்கு நல்ல ஃபீட்பேக் கொடுக்க உதவும்.

அடுத்த கட்டமாக, அமைதியான தொனியில் மேலதிகாரி சொன்னதை மீண்டும் எடுத்துக்கூறுங்கள். அவர் சொல்லுவதை நீங்கள் கேட்கிறீர்கள் மற்றும் உரையாடலை இலகுவான மற்றும் நேர்மறையான திசையில் வழிநடத்துகிறீர்கள் என்று சொல்வதற்கான ஒரு வழி இது. எதிர்மறை வார்த்தைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

சில மேலதிகாரிகள் காரணமில்லாமல் உங்களைக் குறை சொல்லுவதுண்டு. ஆனால், நீங்கள் அதை மனதிற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது. அவரை வீழ்த்துவதற்கு, மன்னிப்பு கேட்கலாம். உங்கள் மீது தவறு இருந்தால், நிச்சயம் மன்னிப்பு கேட்பது அவசியம். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இந்த ஒரு வார்த்தை மட்டுமே என்பதால் அது நிச்சயம் வேலை செய்யும். பின்னர் எடுத்துக்காட்டுகளுடன் அவை அவர்களின் தவறான புரிதல் என்பதை நிரூபியுங்கள்.

அவர்கள் அமைதியானவுடன், அவரிடம் சென்று, நீங்கள் அதை எப்படிச் செய்து விஷயங்களைச் சரிசெய்ய முடியும் என்று கேளுங்கள். அவர்கள் எதுவும் பரிந்துரைக்கவில்லை என்றால், உங்கள் தீர்வுகளை உங்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும். நீங்கள் கூறுவதில் ஏதேனும் ஒன்றை அவர்கள் ஒப்புக்கொண்டவுடன், அதை மின்னஞ்சலில் இடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் இந்த விஷயங்களை ஆவணப்படுத்துவது எப்போதுமே பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், உங்கள் மனநிலை பாதிக்கும்படி மீண்டும் மீண்டும் இந்த நிலை நீடித்தால், உங்கள் மனிதவள துறையை அணுகவேண்டும். நீங்கள் குற்றவாளி அல்ல என்று உங்களுக்குத் தெரிந்தவரை உங்களுக்காக எழுந்து நிற்பதில் தவறில்லை. ஆனால், எப்போதும் அதற்கான போதுமான ஆதாரம் வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Relationship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment