ஆண்களே... கருவளக் கலை படியுங்கள்!

சுய இன்ப பழக்கம் நல்லது என்று இந்த டிவியில் சொன்னார்கள், அந்த நிகழ்ச்சியில் சொன்னார்கள் என்று இளைஞர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

விந்துவில் எவ்வளவு விந்தணு உள்ளதோ, அதைப் பொருத்து தான் ஒரு ஆணின் கருவளத்தின் ஆரோக்கியம் சொல்லப்படுகிறது. தற்போதைய உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கை என்பது ஒரு மில்லிமீட்டர் விந்துவில் 15 மில்லியன் விந்தணுக்கள் அல்லது ஒரு மாதிரியில் குறைந்தது 39 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும். 10 மில்லியனுக்கும் குறைவான அளவில் விந்தணுக்கள் இருந்தால், அது அசாதாரணமாக மற்றும் ஆண்களின் கருவளக் குறைவைக் குறிப்பதாக கருதப்படுகிறது. ஒரு ஆணின் ஹார்மோன்களை பாதிக்கும் எந்த ஒரு விஷயமும், விந்தணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். முக்கியமாக ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் எந்த ஒரு காரணியும், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பெரிதும் பாதிக்கும். ஆண்கள் வருத்தம் கொள்ளும் விஷயங்களுள் ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது. இதற்கு முதன்மையான காரணமே வாழும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான். முக்கியமாக ஆண்களின் புகைப்பழக்கமும், மது அருந்தும், ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும், துரித உணவுப் பழக்கமும் தான்.

அதுமட்டுமின்றி, ஆண்களின் சுய இன்பம் கொள்ளும் பழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இதுபோன்ற செயல்களால் குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கையை எப்படி எளிதான முறையில் அதிகரிப்பது என்பது குறித்த சில வழிமுறைகள் இதோ,

விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க முதலில் செய்ய வேண்டிய, இல்லை… இல்லை… விட வேண்டிய விஷயம் புகைப்படிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும். ஆயிரம் முறை இந்த அட்வைஸ்களை நாம் கேட்டிருப்போம். ஆனால், அதனை ஒருமுறை கூட ஃபாலோ செய்திருக்க மாட்டோம். சிகரெட், மதுவால் என்னவாகிவிடப் போகிறது என்ற மிதப்பு தான் அதற்கு காரணம்.

அதேபோல், ஆன்டி-பயாடிக்ஸ், ஆன்டி-ஆன்ட்ரோஜென், ஆன்டி-சைகோடிக், கார்டிகோஸ்டெராய்டுகள், அனாபாலிக் ஸ்டெராய்டுகள் போன்ற வகை மருந்துகளை ஆண்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என கூறுகிறார்கள் மருத்துவர்கள். இவைகளை ஆண்கள் எடுப்பதைத் தவிர்த்தால், விந்தணு எண்ணிக்கை குறைவது தடுக்கப்பட்டு, விந்தணுவின் எண்ணிக்கை உடலில் எப்போதும் ஆரோக்கியமான அளவில் பராமரிக்கப்படுகிறதாம்.

மோசமான விந்து ஆரோக்கியம் மற்றும் விந்தது எண்ணிக்கை குறைபாடு உள்ளவர்களுக்கு வெந்தயம் மிகச் சிறந்த உணவுப் பொருள் என்கிறார்கள் மருத்துவர்கள். விந்து குறைபாடு இருக்கும் ஆண்கள், அன்றாடம் வெந்தயத்தை சாப்பிடுவதோடு, அன்றாட உணவில் சேர்த்து வந்தால், விந்து உற்பத்தி ஆரோக்கியமாக இருக்குமாம்.

மேலும், போதுமான அளவு வைட்டமின் டி மற்றும் கால்சியம் விந்துவின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள், வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

அஸ்வகந்தா, பழங்காலம் முதலாக பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், விந்தணு எண்ணிக்கை குறைவாக உள்ள 46 ஆண்களுக்கு தினமும் 675 மிகி அஸ்வகந்தா என 90 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்ததில், 167 சதவீதம் விந்தணு எண்ணிக்கை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான கொழுப்பு பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6, விந்துக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாகும். சில ஆய்வுகளில் இந்த இரண்டு அத்தியாவசிய ஒமேகா பொருட்களை சரிசம அளவில் எடுக்கும் போது, விந்தணுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இவையெல்லாம், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உணவு தொடர்பான உதவிகள்.

ஆனால், விந்துவை அதிகரிக்க நமக்கு நாமே செய்யும் உதவி சுய இன்ப பழக்கத்தை விடுவது தான். சுய இன்ப பழக்கத்தால், விந்துவின்  எண்ணிக்கை குறைந்து, அதனால் உணர்ச்சிகள் இருந்தும் திருப்தியடையாத நிலை உருவாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுய இன்ப பழக்கம் நல்லது என்று இந்த டிவியில் சொன்னார்கள், அந்த நிகழ்ச்சியில் சொன்னார்கள் என்று இளைஞர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close