நித்யா மோகன சுந்தரம்
கத்தரிக்காய் சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
அரிசி — 1கப்
சாம்பார் வெங்காயம் 200 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய் — 6
தக்காளி — 1
எண்ணெய்— தேவைக்கேற்ப
இஞ்சித் - சிறிது
கடுகு— தாளிக்க
கொத்தமல்லி சிறிது
நெய்— 1டீஸ்பூன்
கொடை மிளாகாய் 1
பச்சைப் பட்டாணி – கால்கப்
மிளகாய்பொடி - ருசிக்கு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசியை உதிர் உதிராக வடித்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். கத்தரிக்காயை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்த்தும் கடுகு பொட்டு வெடித்த பின் வெங்காயத்தை வதக்கி, இஞ்சி, தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் பட்டாணி, நறுக்கிய கத்தரிக்காய், கொடை மிளாகாய் , சேர்த்து மிதானமான தீயில் உப்பு சேர்த்து வதக்கவும். வதக்கிய காயுடன் மிளகாய்பொடி தூவி இறக்கவும்.
அனைத்தையும் சாதத்தில் சேர்த்து உதிர்,உதிராகக் கலக்கவும். கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும்.
பயன்:
பி-காம்ப்ளக்ஸ் வகை வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (வைட்டமின் பி5), பைரிடாக்சின் (வைட்டமின் பி6), தயமின் (வைட்டமின் பி1), நியாசின் (வைட்டமின் பி3) ஆகியன அடங்கி உள்ளன. கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும்.