Advertisment

15 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் ஜிலேபி… தீபாவளி ஸ்வீட்ஸ் இப்படி செய்யலாமே?

முக்கிய இனிப்பு வகையான ஜிலேபியை ஈஸியாக செய்வது குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்

author-image
WebDesk
New Update
15 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் ஜிலேபி… தீபாவளி ஸ்வீட்ஸ் இப்படி செய்யலாமே?

தீபாவளி என்றாலே நாக்கில் எச்சில் ஊறும் பலருக்கு! காரணம், விதவிதமான ஸ்வீட்களுக்கு என்றே அவதாரம் எடுத்த நாள் இது. காலையிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்து, குழந்தை குட்டிகளுடன் புத்தாடை அணிந்து மகிழ்வர். அவரவர்a நம்பிக்கைக்கு ஏற்ப, இறைவனை வணங்கி, இனிப்புகளுடனும், பட்டாசுகளுடனும் அமர்க்களப்படுத்துகிற விழா.

Advertisment

அன்றைய நாளில் பக்கத்துவீட்டுகாரர்களுக்கு ஸ்வீட்ஸ் கொடுப்பது வழக்கம். பல வகையான ஸ்வீட்ஸ் வகைகள் உள்ளன. அதில், முக்கிய இனிப்பு வகையான ஜிலேபியை ஈஸியாக செய்வது குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்

தேவையான பொருள்கள்

  • 2 கப் சர்க்கரை
  • 1 கப் மாவு
  • ஏலக்காய்
  • 4 ஸ்பூன் மைதா மாவு
  • 2 ஸ்பூன் தயிர்
  • 1 ஸ்பூன் நெய்
  • பேகிங் பவுடர்
  • பைபிங் பேக் அல்லது மில்க் பேக்கட்

ஜிலேபி ஈஸியாக செய்யும் வழிமுறை

முதலில் 2 கப் அளவு சர்க்கரையும், 1 கப் அளவு தண்ணீரும் சேர்க்க வேண்டும்.

பின்னர், ஜிலேபியை ஆரஞ்சு நிறத்தில் கொண்டு வர, ஆரஞ்ச்-ரெட் கலர் மிகஸ் செய்யப்படுகிறது. கலர் தேவையில்லாதோர், இந்த ஸ்டேப் ஸ்கிப் செய்துவிடலாம்

அடுத்து, சிறிது அளவு ஏலக்காய் சேர்த்துவிட்டு, சர்க்கரை கரையும் அளவிற்கு நன்கு கலக்கிவிட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்தால் போதும், சரக்கரை பாகு தயாராகிவிடும்.

இதற்கிடையில், ஜிலேபிக்கு தேவையாக மாவை ரெடி செய்ய வேண்டும். அதற்கு ஒரு பவுல் எடுத்துவிட்டு, 4 ஸ்பூன் மைதா மாவு சேர்க்க வேண்டும். அத்துடன், இரண்டு ஸ்பூன் தயிரும், 1 ஸ்பூன் அளவிற்கு நெய்யும் சேர்க்க வேண்டும். அடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துவிட்டு, நன்கு கலக்க வேண்டும். பின்னர், ஜிலேபி மொறு மொறுனு வருவதற்காக, சிறிது அளவு ஈனோ அல்லது பேகிங் பவுடர் சேர்த்தால் போது, மாவு ரெடி.

அடுத்தது, ஜிலேபி செய்திட பைபிங் பேக் அவசியம். அது இல்லாதவர்கள், மில்க் பெக்கேட் கவரை உபயோகிக்கலாம். மில்க் பெக்கேட் நன்கு கழுவிவிட்டு, அதில் தயார் செய்த மாவை நிரப்ப வேண்டும். அதன் நுனியை தான், கட் செய்து ஜிலேபி ஊற்ற உபயோகிக்கப்போறோம்.

தொடர்ந்து, தனி பெனில் எண்ணெய் ஊற்றி, மில்க் பெக்கேட் நுனியில் சிறிாக கட் செய்து, ஜிலேபி வடிவத்தை மாவை மூன்று முறை சுற்றிஎடுக்க வேண்டும். இந்த செயல்முறையின் போது, எண்ணெய மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அதிகளவில் சூடு இருந்தால், ஜிலேபி கருகும் அபாயம் உள்ளது.

ஜிலேபி நன்கு தயாரான பிறகு, அதனை எடுத்து, சர்க்கரை பாகுவில் ஊறவைக்க வேண்டும். சிறிது நேரம் ஊறுனதும், அதனை வெளியே எடுத்திடலாம். அவ்வளவு தான் சுவையான ஜிலேபி ரெடி. இந்த செயல்முறையில் தேவையான ஜிலேபிகளை உடனடியாக தயார் செய்துவிட முடியும்.

ஜிலேபி செயல்முறையை காண இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்:

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Health
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment