குழந்தைகள் விரும்பும் கருணைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி?

மூலத்தால் கஷ்டபடுபவர்கள் ஒரே மாதிரி கருணைக் கிழங்கை செய்து சாப்பிட விரும்பமாட்டார்கள். அதனால் இப்படி வித்தியாசாமாக செய்து சாப்பிடால் ருசியாக இருக்கும்.

நித்யா மோகனசுந்தரம்

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு – 100 கிராம்
பூண்டு – 7 அல்லது 8 பல்
இஞ்சி – சிறிய துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1டீஸ்பூன்
கடலை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 3
கொத்தமல்லி – 2 கொத்து
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, சோம்பு, சீரகம், இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கருணைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி குக்கரில் வைத்து வெய்ட் போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசி களைந்த தண்ணீரில் செய்தால் சாப்பிடும் போது விறு விறு என்று இருக்காமல் இருக்கும். பிறகு கருணைக்கிழங்கு வெந்ததும் தோல் உரித்து நன்கு மசித்து விடவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு அரைத்து வைத்த விழுது மற்றும் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை. ஒரு நிமிடம் கழித்து மசித்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும். பிறகு தோசைமாவு பதத்தில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி 2 நிமிடம் கிளறவும். 2 நிமிடம் கழித்து வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆனதும் மேலே கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் செய்த கலவையை போட்டு பரப்பி விடவும். பிறகு அதை வில்லைகளாக போட்டு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எடுத்து வைத்த வில்லைகளை போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு ஒரு நிமிடம் வைத்து வெந்ததும் எடுக்கவும்

பயன்:

மூலத்தால் கஷ்டபடுபவர்கள் ஒரே மாதிரி கருணைக் கிழங்கை செய்து சாப்பிட விரும்பமாட்டார்கள். அதனால் இப்படி வித்தியாசாமாக செய்து சாப்பிடால் ருசியாக இருக்கும்.

×Close
×Close