scorecardresearch

கொழுப்பை கரைக்கும் கொள்ளு சட்னி செய்வது எப்படினு தெரிஞ்சுக்கோங்க

அரைத்த சட்னியில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து சேர்த்துக் கொள்ளவும். இதை இட்லி, தோசையுடன் கொள்ளு சட்னியை சேர்த்து சாப்பிடலாம்.

கொழுப்பை கரைக்கும் கொள்ளு சட்னி செய்வது எப்படினு தெரிஞ்சுக்கோங்க

நித்யா மோகன சுந்தரம்:

கொள்ளு சட்னி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

கொள்ளு 50 கிராம்
காய்ந்த மிளகாய் 5 அல்லது 6
புளி சிறிது
கொத்தமல்லி இலை சிறிய கட்டு
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
கடுகு சிறிது
உளுந்து சிறிது
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:
கொள்ளு, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன், உப்பு, புளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும். அரைத்த சட்னியில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து சேர்த்துக் கொள்ளவும். இதை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

பயன்:

இரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் இந்த சட்னியை சாப்பிடலாம். கொள்ளுக்கு கெட்ட கொழுப்பை கரைக்கும் சக்தி உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: How to make kollu chutney

Best of Express