Advertisment

பத்து நிமிடங்களில் டேஸ்ட்டியான வெங்காய சட்னி ரெடி!

Onion Chutney recipe சட்னிகளில் எவ்வளவு வெரைட்டி கொடுத்தாலும், சூடான தோசைக்கு வெங்காய சட்னி காம்பினேஷன் தனி ருசிதான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to make Tomato Chutney Tasty Tomato Chutney recipe breakfast chatni recipes

How to make Tomato Chutney Recipe

How to make Onion Chutney Tamil : என்னதான் தக்காளி சட்னி, புதினா சட்னி என சட்னிகளில் வெரைட்டி கொடுத்தாலும், சூடான தோசைக்கு வெங்காய சட்னி காம்பினேஷன் தனி ருசிதான். அப்படிப்பட்ட சுவையான சட்னியை 10 நிமிடங்களில் எப்படி தயார் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருள்கள் :

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

உலர்ந்த காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 4

வெங்காயம் நறுக்கியது - 1

சிறு துண்டு புளி

வெல்லம் - ½ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவைக்கேற்ப

தாளிக்க :

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காய தூள் - 1 சிட்டிகை

உலர்ந்த சிவப்பு மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் உலர்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

பிறகு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, சற்று பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

இந்தக் கலவை முற்றிலும் குளிர்ந்த பிறகு மிக்சி ஜாரில் மாற்றி, சுவைக்குப் புளி, உப்பு மற்றும் வெல்லம், தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

மற்றொரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

தாளிப்பு அடங்கியதும் இறுதியாக, அரைத்து வைத்த வெங்காய சட்னியின் மீது அதனை ஊற்றிக் கலந்துவிடவும். இட்லி அல்லது தோசையுடன் சூடாகப் பரிமாறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment