Advertisment

குளிர்காலத்தில் ஜூஸ் மூலம் எடையை குறைப்பது எப்படி?

ஒரு முழு கேரட் சாப்பிட்டாலே, நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியே இருக்காது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to reduce weight by juice in winter? - குளிர்காலத்தில் ஜூஸ் மூலம் எடையை குறைப்பது எப்படி?

how to reduce weight by juice in winter? - குளிர்காலத்தில் ஜூஸ் மூலம் எடையை குறைப்பது எப்படி?

குளிர்காலம் குளிக்கவிடாம வச்சு செஞ்சுக்கிட்டு இருக்கு. பச்சத் தண்ணிய தொட்டாலே, பவர் ஷாக் அடிச்ச மாதிரி விர்ர்ர்-னு இருக்கு. பயங்கரவாதிகள் மாதிரி முகத்தை முழுசா மூடிக்கிட்டுப் போகல-ன, உங்கள ஆஸ்பத்திருக்கு அள்ளிக்கிட்டு தான் போகணும். இதுலே எங்கேருந்து நமக்கு வேர்க்குறது!! வேர்க்குற அளவுக்கு நாம வேலை செய்யலனா ஒழிய, உடம்பு குறையாது. வேர்க்குற மாதிரி வேலை செய்யுறது நமக்கு புடிக்காது. ஸோ, அவங்களுக்கு தான் இந்த டிப்ஸ்.... ஜூஸ் மூலம் இந்த குளிர் காலத்தில் உடை எடையை எப்படி குறைக்கலாம்-னு பார்ப்போம்.

Advertisment

தக்காளி ஜூஸ்:

தக்காளி, குறைவான கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் விவசாயத்துறை ஆய்வின் படி, 100 கிராம் தக்காளி வெறும் 18 கலோரிகளையும், 3.86 கிராம் கார்போவும் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க தக்காளி ஜூஸ் பிரதான பங்கு வகிக்கிறது.

வாரத்திற்கு மூன்று முறை தக்காளி ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

கேரட் ஜூஸ்:

கேரட்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. நார் செரிமானம் அடைய மிக அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஸோ, ஒரு முழு கேரட் சாப்பிட்டாலே, நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியே இருக்காது. அமெரிக்காவின் விவசாயத்துறை ஆய்வின் படி, 100 கிராம் கேரட்டில் 41 கலோரியும், 3 கிராம் நார்ப்பொருளும் உள்ளது.

வாரத்திற்கு மூன்று முறை கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

ஆப்பிள் ஜூஸ்:

குறைவான கலோரி கொண்ட பழம் ஆப்பிள். 100 கிராம் ஆப்பிளில் 50 கலோரிகள் உள்ளது. ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

Healthy Life Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment