21 நாள் முடக்கம்: இந்த பொருட்கள் மட்டும் சமையலறையில் இருந்தால் கவலையே இல்லை!

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மளிகைப் பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். அத்தியாவசியப் பொருட்களுக்கு தடையில்லை. அதனால்,வீட்டு சமையலறையில் என்னென்ன பொருட்கள் இருந்தால் இந்த 21 நாட்களை கவலை இல்லாமல் கடக்கலாம் என்பதற்கு சில குறிப்புகள் தருகிறார் ரோஷ்னி பஜாஜ் சங்க்வி.

coronavirus, coronavirus stock, coronavirus recipes, உணவுப்பொருள்கள் சமையலறையில் சேமிப்பது எப்படி, கொரோனா வைரஸ், உணவுப்பொருள் சேமிக்க குறிப்புகள், coronavirus food, lockdown, panic buying, how to stock your pantry, groceries, what to buy during lockdown, tamil indian express, covid19
coronavirus, coronavirus stock, coronavirus recipes, உணவுப்பொருள்கள் சமையலறையில் சேமிப்பது எப்படி, கொரோனா வைரஸ், உணவுப்பொருள் சேமிக்க குறிப்புகள், coronavirus food, lockdown, panic buying, how to stock your pantry, groceries, what to buy during lockdown, tamil indian express, covid19

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மளிகைப் பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். அத்தியாவசியப் பொருட்களுக்கு தடையில்லை. அதனால்,வீட்டு சமையலறையில் என்னென்ன பொருட்கள் இருந்தால் இந்த 21 நாட்களை கவலை இல்லாமல் கடக்கலாம் என்பதற்கு சில குறிப்புகள் தருகிறார் ரோஷ்னி பஜாஜ் சங்க்வி.

உணவு மற்றும் பயண எழுத்தாளர் ரோஷ்னி பஜாஜ் சங்க்வி, “இந்த சூழ்நிலையில் உங்களுக்குத் தேவையான கடைசி எதிர்வினை இதுதான்.” என்று கவலை தெரிவிக்கிறார். மும்பையைச் சேர்ந்த சங்க்வி, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால் ஏற்பட்டுள்ள சூழலைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மளிகைக் கடைகள், மருந்தகங்கள், உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டபோதிலும் மக்கள் அச்சத்தில் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு கூட்டமாக சென்று வாங்கி குவித்து வருகின்றனர்.

இது குறித்து நியூயார்க் பிரெஞ்சு சமையல் நிறுவனத்தின் பட்டதரியான சங்க்வி, சிக்கலான நேரங்களில், உணவுப்பொருட்களை சேமித்து வைப்பதற்கு சரக்கறை ஒன்றை அமைக்க சிறிய யோசனையும் திட்டமிடலும் போதுமானது. இந்திய உணவின் இன்றியமையாத பகுதி தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள். அரிசி மற்றும் பருப்பு அத்தியாவசியங்களைத் தவிர, ராஜ்மா (சிறுநீரக பீன்ஸ்) மற்றும் சனா (சுண்டல்) ஆகியவற்றை வைத்திருக்க சங்க்வி பரிந்துரைக்கிறார்.

உணவுப் பொருட்களை எப்படி சேமித்து வைப்பது என்பது குறித்து சில குறிப்புகள்:

அடிப்படை, ஊட்டச்சத்து அடர்த்தியான உணவுகளை சேமித்து வைக்கவும்

இந்திய உணவின் இன்றியமையாத பகுதி தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள். அரிசி மற்றும் பருப்பு அத்தியாவசியங்களைத் தவிர, பீன்ஸ் மற்றும் மூக்கடலை ஆகியவற்றை வைத்திருக்க சங்க்வி பரிந்துரைக்கிறார். “வேறு எதுவுமில்லை என்றால், இவைகளைக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் ஒரு சிற்றுண்டி தயாரிக்கலாம்” என்று சங்க்வி கூறுகிறார்.

சங்க்வி அவற்றை முளைக்க வைக்க பரிந்துரைக்கிறார். “இப்போது, ​​புதிய கீரைகள் எளிதில் கிடைக்காதபோது, முளைக்க வைப்பது ஃபிரஷ் காய்கறிகளாக மாற்றுவதற்காக செய்யப்படுகின்றன. ஊட்டச்சத்து அடர்த்தியான உணவை சேமித்து வைக்கும் உத்தி அதிக இடத்தை ஆக்கிரமிக்காது. ஆனால், அது உங்கள் உணவில் சுவையை சேர்க்கிறது.” என்று சங்க்வி கூறுகிறார்.

கட்டாயம் இருக்க வேண்டிய மசாலாக்கள் யாவை?

ஒரு இந்திய சமையலறை அடிப்படையான மசாலாக்கள் இல்லாமல் செயல்பட முடியாது: மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகம், மிளகாய், கடுகு, ஆகியவை சமையலறையில் பயன்படுத்தப்படும் அடிப்படையான மசாலாப் பொருட்க்ள். ஆனால், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்கான மசாலாப் பொருட்களையும் மசாலாக்களையும் சேமித்து வைக்கும்” என்று சங்க்வி கூறுகிறார். எடுத்துக்காட்டாக, கிழக்கு இந்திய சமையலறைகளில் ஐந்து மசாலாக்கள் கலவையாக இருக்கலாம். “குஜராத்தி என்றால், ஒரு கொத்துமல்லி சீரகக் கலவையானது நிச்சயமாக இடம்பெறும். ஒரு தென்னிந்திய சமையலறையில் காதி பட்டை, (கறிவேப்பிலை) இருக்கும். நான் சிந்தி, அதனால் நான் எப்போதும் என் டப்பாவில் மா தூள் வைத்திருப்பேன். விரைவாக சமைப்பதற்கு எளிதில் வைத்திருக்க, சன்னா மசாலா மற்றும் தந்தூரி மசாலா போன்ற இரண்டு எளிதான மசாலா கலவைகளையும் சங்க்வி பரிந்துரைக்கிறார். “நீங்கள் மூக்குகடலையை வேகவைக்கலாம், சிறிது தக்காளியை வெட்டி மசாலா சேர்க்கலாம். அல்லது, நீங்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வெட்டி தந்தூரி மசாலாவுடன் பூசலாம்” என்று சங்க்வி கூறுகிறார்.

ஃபிரிட்ஜில் வைப்பதற்கு கடினமான காய்கறிகளையும், சுத்தமான பழங்களையும் தேர்வு செய்யுங்கள்

நாடு முடக்கப்படும்போது புதிய காய்கறிகளை எளிதில் வாங்க முடியாது, எனவே சங்க்வி எளிதில் அழுகிப்போகாத கடினமான காய்கறி வகைகளைத் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்துகிறார். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு தவிர, சேம்பு, பீட்ரூட், உருளைக்கிழங்கு, கருனைக்கிழங்கு போன்றவை கடினமான காய்கறி வகைகள் ஆகும்.

சுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ள சங்க்வி பல குறிப்புகளை பரிந்துரைத்துள்ளார். தக்காளியை சுத்தப்படுத்தி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது எடுத்துக்கொள்ளலாம். வாழைப்பழங்களை பிசைந்து ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் தயிரைக் கொண்டு சாப்பிடலாம்; ஆப்பிள்களை வெல்லத்துடன் சுண்டவைத்து, ஒரு குடுவையில் போட்டு, ரொட்டியுடன் வைத்திருக்கலாம்;

மேலும், அவர் எப்படி தயாராக உள்ளார் என்பதை கூறுகையில், “நான் தேங்காய்கள் முழுவதையும் அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துள்ளேன். அதனுடன், நீங்கள் பலவிதமான சட்னிகள் மற்றும் காண்டிமென்ட்களை தயாரிக்கலாம்” என்று சங்க்வி கூறுகிறார்.

“உற்பத்திப் பொருட்கள் எளிதில் கிடைக்காதபோது, ​​குளிர்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு நுட்பங்கள் முழுவதுமாக உள்ளன. அல்லது நம்மிடம் ஃப்ரிட்ஜ்கள் இல்லாதபோது திரும்பவும்! அந்தக் காலங்களிலிருந்து இப்போது நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது.

குப்பைகளை அகற்றிவிட்டு உங்கள் பெட்டிகளை ‘ஆரோக்கியமான’ தின்பண்டங்களால் நிரப்பவும். கடலை பர்ப்பியைப் போல வேறு எதுவும் ஒரு குழந்தையை மகிழ்ச்சியாக மாற்றுவதில்லை.

இந்திய கடலை பர்ப்பிகள் ஆரோக்கியமான பொருளால் ஆனது. தேங்காய் பர்ப்பி ஆகியவற்றில் முழுக்க முழுக்க வெல்லம் மிகக் குறைவு. இது சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட்டுகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கும். வேர்க்கடலையும் மூக்கடலையும் சிற்றுண்டிகளாகும். அவை பதப்படுத்தப்பட்டு உப்பு நிறைந்தவை.

உலர்-பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பேரீச்சை பழம், அத்திப்பழம் போன்ற விலை அதிகம் இல்லாத எளிய உலர்ந்த பழங்களை சிறிய அளவில் உட்கொள்ளலாம்.

உணவே மருந்து, மருந்தே உணவாக இருக்கட்டும். வேகவைத்த பீன்ஸ், அன்னாசிப்பழம் துண்டுகள்; வேகவைத்த இறைச்சிகள் ஆகியவை மலிவாகக் கிடைக்கின்றன. இவை எல்லாம் நன்றாக சமைக்கப்படுவது முக்கியம். மோசமாக கையாளப்பட்ட இறைச்சி, முட்டை மற்றும் மீன் ஆகியவை ஆபத்தானது. அவற்றை சாப்பிட்டுவிட்டு வயிற்றுப் பிரச்னைக்காக மருத்துவமனைக்கு செல்லாதீர்கள்.

முட்டைகள் அதிக புரதச்சத்து உள்ள சீஸ் ஆகியவற்றை சேமித்து வையுங்கள். நிச்சயமாக சீஸ் சேமித்து வைக்கவும். ஏனெனில் சீஸ் நீண்ட நேரம் நீடிக்கும் மற்றும் நிறைய உணவுகளை செய்ய உதவுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவு மிகவும் வசதியானது என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளும் முக்கியம். இஞ்சி பல மருத்துவ ஆய்வுகளில் வைரஸ் தடுப்பு பண்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இஞ்சி மற்றும் புதிய மஞ்சள் கடினமானவை மற்றும் நீண்ட காலம் நீடிக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் இஞ்சி புதியதாக நசுக்கப்பட்டு வைத்துக்கொள்ளலாம்.

முதலில் சமைப்பதறு வானலி உள்ளிட்ட பாத்திரங்கள் தேவை. நாடு முழுவதும் முடக்கப்பட்டிருப்பது ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், அடிப்படை செயல்பாட்டிற்கு ஒருவருக்கு மூன்று நான்கு விஷயங்கள் தேவை. தட்டையான தவா ஒன்று, ஒரு தாவா அல்லது வாணலி, ரொட்டி, தோசைகள் அல்லது பொருட்களை மீண்டும் சூடாக்க; வெவ்வேறு வடிவங்களில் நீண்ட கை கொண்ட பாத்திரங்கள் தேவை; ஆம்லெட்டுகளை புரட்ட இரண்டு தோசை திருப்பிகள், தேநீர் தயாரிக்க ஒரு கெண்டி ஆகியவை தேவை.” என்று சங்க்வி கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to stock foods vegetables fruits grains masalas in indian pantry tips

Next Story
இது கொரோனா ஸ்பெசலோ….: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்காக ஜியோவின் அதிரடி அறிமுகம்reliance jio, jio work from home, jio work from home plan, work from home, reliance jio 4G data voucher, jio 4G data voucher
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com